tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஒருவர் என்கவுண்ட்டர்!

சென்னை, ஜூலை 14 - ஆம்ஸ்ட்ராங் கொலை  வழக்கில் கைது செய்யப் பட்டிருந்த திருவேங்கடம் என்கவுண்ட்டர்

விசாரணைக்கு அழைத் துச் சென்ற இடத்தில், போலீ சாரைத் தாக்கி விட்டு திரு வேங்கடம் தப்பியோட முயன்றதாகவும், அப்போது  தற்காப்புக்காக நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில்  திருவேங்கடம் கொல்லப் பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின்  மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்  ராங் ஜூலை 5 அன்று  சென்னை பெரம்பூரில் கொடூ ரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பதற் றத்தை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்  கறிஞர் அருள், சந்தோஷ்,  திருவேங்கடம் உள்ளிட்ட 11  பேர் கைது செய்யப்பட்டனர். 

பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இந்த 11 பேரையும், நீதி மன்ற அனுமதியின் பேரில் 5  நாட்கள் காவலில் எடுத்து,  அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரித்து வந்த னர்.

இதில், திருவேங்கடம் என்பவர் ஆயுதங்களை மணலியிலுள்ள வீட்டருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை அதிகாலை 5.30 மணிக்கு அந்த இடத்திற்குப் போலீ சார் அழைத்து சென்றதாக வும், அப்போது ரெட்டேரி  ஏரிக்கரை ஆட்டுமந்தை செல்லும் வழியில், காவ லர்களை தள்ளிவிட்டு திரு வேங்கடம் தப்பியோடிய தாகவும், புழல் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதி யில் அவரை பிடிக்க முயன்ற போது, மறைத்து வைத்தி ருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்  கிச் சுட்டதாகவும், பதிலுக்கு  தற்காப்புக்காக போலீசார்  துப்பாக்கியால் சுட்டதில்  இடது மார்பு, வயிறு பகுதி களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த திருவேங்கடம் உயி ரிழந்ததாகவும் கூறப்படு கிறது. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திரு வேங்கடம் மீது 3 கொலை  உள்பட 11 வழக்குகள் உள் ளன. ஜூலை 5 சம்பவத்தின் போது, ஆம்ஸ்ட்ராங்கை முதலாவது நபராக வெட்டி யவர் திருவேங்கடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பகுஜன்  சமாஜ் தலைவர் ஆம்ஸ்  ட்ராங் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளி யாகியுள்ளன. அதில் கொலையாளிகள் வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது பதிவாகியுள்ளது.