tamilnadu

img

ஏப்.2வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு  

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 2வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஏப்ரல் 2வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.  அதன்படி அரசு கல்லூரியில் 1,334 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது.

2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர திட்டத்தை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.