tamilnadu

img

தாம்பரம் - செங்கல்பட்டு உயர்மட்ட பாலம் கைவிடப்படுகிறது!

சென்னை, ஜூன் 4- சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தடுக்கும்  வகையில் புதிய மேம்பாலங் கள் கட்டப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில் கோயம் பேட்டில் செயல்பட்டு வந்த  பேருந்துநிலையமும் தற்போது கிளாம்பாக்கத் திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் தற்போது தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகை யில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜிஎஸ்டி சாலை யில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத் தூர் வரை முதல் கட்டமாக  உயர்மட்ட மேம்பாலம்  அமைக்க திட்டமிட்டுள்ள னர். இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்த நிலை யில் ஏற்கெனவே போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக சுமார் 27 கி.மீ தூரத்திற்கு உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ரூ.3523 கோடி செலவில் இந்த மேம்பாலம் பெருங்களத்தூ ரில் இருந்து தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிட்டிருந் தனர்.

இதனால் அதிகப்படி யான செலவு மற்றும் கூடு தல் சுங்ககட்டணம் வசூலிக் கும் நிலை இருந்தது. இதற்கிடையே தாம்பரம் -செங்கல்பட்டு இடையே யான 27 கி.மீட்டர் உயர்த்தப் பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முடிவு  செய்து உள்ளது. இதற்கு  பதிலாக ஜி.எஸ்.டி.சாலை யில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்ட மிட்டு உள்ளது. ஏற்கெனவே முக்கிய சந்திப்புகளான வண்டலூர் மற்றும் பெருங் களத்தூரில் மேம்பாலங்கள் உள்ளன.

இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம் பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ் சேரி, மற்றும் காட்டாங் கொளத்தூருக்கு செல்லா மல் பயணம் செய்யமுடி யும். இதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இறுதி கட்ட அனுமதி கிடைத்தவு டன் மேம்பாலப்பணிகள் நடைபெறும் என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

;