திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

சிறுபான்மை மக்கள் மீது துவேஷம் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுத்திடுக! சிறுபான்மை மக்கள் நலக் குழு வலியுறுத்தல்

சென்னை,மே 10- கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் சிறுபான்மை மக்கள் மீது துவேஷம் பரப்பும் மதவாத தீய சக்திகள் மீது கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலை வர் எஸ்.நூர்முகமது  மாநில பொதுச்செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுக்கும் அறிக்கை வருமாறு: உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட்-19 நோய்க்கு எதிராக போராடி வரு கின்றனர். ஆனால் இந்தியாவில் குறிப்  பாக தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து சிறு பான்மை முஸ்லிம் மக்கள் மீது  வெறுப்பை உமிழ்ந்து கொண்டும்,  ஒரு பகுதி மக்களை வெறியேற்றி கொண்டும் வருகின்றனர். இந்த தீய சக்திகள் மீது தமிழக அர சும், காவல் துறையும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ஜெயின் ஃபேக்ரீஸ் & கன்ஃபெகஷனரீஸ் தனது நிறுவனத்தில் முஸ்லிம்கள் பணிக்கு வைக்கப்படவில்லை என விளம்பரம் செய்துள்ளது. அதேபோல “இந்து தமிழர் கழ கம்” என்ற அமைப்பு “துலுக் கனை வெட்ட வேண்டும் என்றால்  எத்தனை பேர் ஆயுதம் எடுப்பீர் கள்” என முகநூலில் கருத்து பகிர்ந்து வெறியை கிளப்பிவிட்டு வருகின்றது. ரமலான் நோன்பு காலத்தில் வெள்ளிக்கிழமை கூட மசூதிக்குச்  செல்வதை தவிர்த்து முஸ்லீம் கள் வீட்டிலேயே நமாஸ் செய்து வருகின்றனர். மசூதிகளில் நோன்பு கஞ்சி தயார் செய்து வழங்குவதும் இல்லை, ரமலான் கால ஈகை செய்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட  போதும் கூட கொரோனா நோயின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிறுபான்மை மக்கள் உள் ளிட்ட அனைவரும் மத வழி பாட்டு கூடங்களில் கூடுவதை தவிர்த்து தான் வருகின்றனர்.

ஏன்,  மதுரை கள்ளழகர் விழாவும், திரு வண்ணாமலை கிரிவலம் உள்ளிட்ட இந்து கோவில்களிலும் கூட பெயரளவிலேயே விழாக் கள் நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக  இயக்கங்களின் இதுபோன்ற முன்னெடுப்புகளை சிதைக்கும் வகையில் மதவெறி சக்திகளின்  செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் பேக்கரி அதிபரை காவல்துறை  கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கி றோம். ஆனால் சம்மந்தபட்ட குற்றவாளி விடுதலை செய்யப் பட்டுள்ளது காவல்துறை நடவ டிக்கை கண்துடைப்பாக அமைந்துள்ளது என எண்ண தோன்றுகிறது. எனவே உரிய சட்டத்தின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க  வேண்டுமென வலியுறுத்துகி றோம்,   தமிழக அரசும், காவல்துறை யும் இது போன்ற சக்திகளை தொடர்ந்து அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழக மக்கள் இந்த இந்துத்துவ மத வெறி சக்திகளின் தீய நோக்கங் களை உணர்ந்து அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும், இத்  தீயசக்திகளுக்கு எதிராக எப்போ தும்போல ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமென தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

;