tamilnadu

கோடை மழை- குன்னூரில் இடி தாக்கி 12 பேர் காயம்

சென்னை,ஏப்.21தமிழகத்தில் கோடை வெயிலின்தாக்கத்தை குறைக்கும் வகையில்சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில்மழை பெய்தது. குன்னூரில் இடிதாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.  தமிழகத்தில் தற்போது கோடைமழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. தமிழகத்தில் சில மாவட் டங்களில் சனியன்று இரவு முதல்விடிய விடிய மழை பெய்தது.இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. விருதுநகர், சாத்தூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்கனமழை பெய்தது. தருமபுரிமாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த கோடைமழை காரணமாக வெப்பம் தணிந்துகுளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் இடிதாக்கியதில் கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.