சென்னை:
உதவித்தொகை பட்டுவாடா செய்வதை அரசுவங்கிகளிலிருந்து தனியார் வங்கிகளுக்கு மாற்றுவதை கைவிட வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் சமூகப்பாதுகாப்பு மாத உதவித் தொகையை, அரசுடைமை வங்கிகளுக்கு பதில் தபால்துறை அலுவலகங்களை பயன் படுத்தும் தனியார் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏடிஎம் வசதி கேட்டால் ஏமாற்ற முயற்சி...
சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை 2012 ஆம் ஆண்டு முதல் அரசுடைமை வங்கிகளில் தமிழக அரசு பணம் செலுத்தி, தனியார் சேவை முகவர்கள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்த தனியார் சேவை முகவர்கள் முறைகேடுகள் செய்வதால், பயனாளிகள், நேரடியாக தொகை எடுத்துக்கொள்ள ஏடிஎம் வசதி கேட்டு, சமூக நலத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர். 11.12.2020 அன்று மாற்றுத்திறனாளி அமைப்புகளுடனான பேச்சுவார்த்தையில்கூட மாநில வருவாய் நிர்வாக ஆணையர் இதனை உறுதிப்படுத்தினார்.
தனியார் வங்கியில் கணக்கா?
“இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் எனப்படும் தபால் துறை பெயரில், அதன் அலுவலகங்களை பயன்படுத்தி இயங்கும் தனியார் வங்கி ஆகும். மத்திய மோடி அரசின் தனியார் மோகத் தால் 2018ல் தனியார் முதலீட்டில் உருவாக்கப் பட்ட இந்த வங்கியின் மேலாண் தலைமை நிர்வாக பொறுப்பை தனியார்தான் நிர் வகித்து வருகின்றனர்.சமூகப்பாதுகாப்பு உதவித்தொகைகளை இனிமேல் இந்த தனியார் வங்கியின் மூலம் பட்டுவாடா செய்யவும், இதற்காக இந்த வங்கியில் புதிய கணக்குகளை துவக்க வேண்டும் எனச் சொல்லி அக்.9 ஆம் தேதியிட்டு சமூக நலத்துறை அரசாணை(எண்.35) வெளியிட்டுள்ளது லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோரை அலைக்கழிக்கும் செயலாகும்.
ரூ.29-50 கட்டணம்
அரசுடைமை வங்கி மூலம் எவ்வித செலவினமும் இல்லாமல் பட்டுவாடா செய்வதை விடுத்து, இந்த புதிய திட்டத்தில் ஒரு பயனாளிக்கு சமூகப்பாதுகாப்பு உதவித் தொகையை கொண்டு சேர்க்க தமிழக அரசு ரூ.29.50 செலவிட வேண்டுமென்பது தேவையற்ற கூடுதல் செலவை உருவாக்கும். பட்டுவாடா செய்வதிலும் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
மோசடி திட்டத்தை கைவிடுக....
எனவே, தனியார் துறையை ஆதரிக்கும் வகையிலும், பயனாளிகள், சங்கங்களிடம் கூட விவாதிக்காமல் எவ்வித வெளிப் படைத்தன்மை இல்லாமலும் அறிவிக்கப் பட்டுள்ள இந்த மோசடி திட்டத்தை உடனடியாக கைவிட உரிய உத்தரவுகளை தமிழக முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.