tamilnadu

முதியோர்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை: சென்னை காவல்துறையின் ‘பந்தம்’ புதிய திட்டம்

சென்னை,மே 16- சென்னையில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவு வதற்காக  ‘பந்தம்’ என்கிற புதிய திட்டம் மக்கள் மத்தி யில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முயற்சியால் கடந்த  ஜனவரி மாதம் தொடங்கப் பட்டது.

இந்த பந்தம் திட்டத்தின் மூலமாக முதிய வர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் இணை ஆணையர்  கயல்விழி தலை மையில் பெண் காவல் துறையை சேர்ந்தவர்கள் 24 மணி நேரமும் 75 வயதை தாண்டிய முதியவர்களுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கிறார்கள்.

தங்களது தேவைகளுக்காக முதிய வர்கள் 9499957575 என்ற  கட்டணமில்லா இலவச  செல்போன் எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்  என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இதுவரை150-க்கும் மேற்பட்டோர் உதவி கேட்டு நாடி இருக்கிறார்கள். இப்படி உதவி கேட்டு பேசும் முதியவர்களில் பலர்  தங்களது உணவு தேவை களை பூர்த்தி செய்யவும் மருந்து மாத்திரைகள் வாங்கி தரவும் காவல்துறை யின் உதவியை நாடி உள்ளனர். அதே நேரத்தில் இட பிரச்சினை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு உதவி செய்ய முடியுமா? என்றும் முதியவர்கள் பலர் உதவி கேட்டுள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளுக்கும் காவல்துறையினர் சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இதுபோன்று தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ள சென்னை  மாநகர காவல் துறையினர் முதியவர்களை பாதுகாக் கும் வகையில் தொடங்கப் பட்டுள்ள இந்த பந்தம் திட்டம்  காவல்துறைக்கும் மூத்த  குடிமக்களுக்கும் இடை யேயான பாச பந்தம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;