பிரதமர் மோடி :- ஊழல்வாதிகளை சிறைச்சாலைக் கதவு வரையில் அழைத்து வந்து விட்டேன்.
ச.சா - நல்லா பாத்துட்டோம்... நீங்க சொல்றது
சர்வதேச விமான நிலைய வாசக்கதவு...!!
****************
முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 10.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
ச.சா - இவ்வளவு பேரா மாநாடு நடத்துறதுக்கு வேலை பாத்தாங்க..!!??
****************
பிரதமர் மோடி :- வாரிசு அரசியல் இந்தியாவில் ஒரு குடும்பத்தில் மட்டும் இல்லை.
ச.சா - பின்ன.. உங்க கட்சிலயே நூத்துக்கணக்குல வாரிசுகள் பதவிகள்ல உக்காந்துருக்காங்களே..?,
****************
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் பீல்டு :- அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஈரானின் முடிவு கவலையளிக்கிறது.
ச.சா - சட்டவிரோதமா அமெரிக்கா தடை விதிக்குறப்போ இதச் சொல்லிருக்கலாமே..??