சென்னை, ஜூன் 1- அயப்பாக்கத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் பகுதி யில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் வழக்கம் போல் வெள்ளிக் கிழமை இரவு 9.மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 11 மணி வரை வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல் லைவாயல் காவல்துறையி னர் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதை பொது மக்கள் ஏற்க மறுத்து நள்ளிரவு 12.30 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில தினங்களாகவே அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவதால் கடும் அவதி அடைகிறோம். இன்றும் மின்வெட்டு ஏற் பட்டதை அடுத்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மின்வெட்டு ஏற்படுவ தால் சிறுவர் முதல் முதிய வர் வரை கடுமையாக அவதிப்படுகிறார்கள். வேலைக்கு சென்று வீடு திரும்புவோர் நிம்மதியாக ஓய்வு எடுக்க கூட முடியாத சூழல் உள்ளதாக வேதனை யுடன் தெரிவித்தனர். எனவே அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் காவல்துறை யினர் உடனடியாக மின்சா ரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.