இலவச வீட்டுமனை பட்டா திருத்தம் செய்யக்கோரிக்கை விழுப்புரம்,
மார்ச் 17- விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி பகுதியில் கடந்த 40- ஆண்டுகளுக்கு முன்பு அரசு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டாவை கிராம கணக்கில் திருத்தம் செய்ய வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட வழுத ரெட்டி, தந்தை பெரியார் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வரும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த 25-குடும்பத்தினருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது.அதனை தற்போது வரை கிராம கணக்கில் திருத்தம் செய்து பட்டா வழங்கலை, சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து அரசு தங்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவினை திருத்தம் செய்து அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். ரூ.65,680க்கு விற்பனை சென்னை, மார்ச் 17 சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. வடசென்னையில் இன்று மின் தடை சென்னை, மார்ச் 17- வடசென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) செங்குன்றம் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத் தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், செங்குன்றம் தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக் கம், சிரங்கவூர், புது நகர் 3வது தெரு, மற்றும் 5வது தெரு, மல்லி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப் படும்.மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த வுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் கூறப்பட் டுள்ளது. 11 கிலோ கஞ்சா பறிமுதல் திருத்தணி,மார்ச் 17- பொன்பாடி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக திரு வொற்றியூரைச் சேர்ந்த தினேஷ், ஆஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.