tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஓபிஎஸ்க்கு விதித்த தடையை நீக்க மறுப்பு
சென்னை, மார்ச் 25- அதிமுகவின் பெயர், கொடி, சின்  னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்  படுத்த, கட்சியிலி ருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத் துக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை எதி ர்த்து பன்னீர்செல்வம் சார்பில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று  உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறை யீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதி லளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டும் ஏ.சி. சண்முகம்
“ஒவ்வொரு முறையும் மோடி ஆசைப்படுகிறார், அவருடைய அமைச்சரவையில் நானும் இருக்க வேண்டும் என்று.  ஆனால் மக்கள்  அதைச் செய்ய வில்லை. நான் தேர் தலில் வென்றால் இஸ்லாமியர்களை யும், மோடியையும் ஒன்றாக்குவேன். கடந்த தேர்தல்களில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்  னத்தில் போட்டியிட்ட போது, அதிமுக வின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்குச் சென்றது. அதற்கான ஆதாரங்கள் என்  னிடம் உள்ளது. தற்போது மோடி பிர தமராவதை எந்த கொம்பனாலும் தடுக்க  முடியாது. நூறு ரூபாய்க்கு உழைத்தால், நான் ஆயிரம் ரூபாயாகத் திருப்பி தரு கிறேன்” என்று புதிய நீதிக்கட்சித் தலை வர் ஏ.சி. சண்முகம் பேசியுள்ளார்.

‘விஜய பிரபாகரன் எனக்கும் மகன்தான்’

“விருதுநகர் தொகுதி மக்களுக் காக நல்ல திட்டங்களை கொடுக்க லாம் என்ற நம்பிக்கை யில் உள்ளேன். தேமு திக சார்பில் போட்டி யிடும் விஜயகாந்த் மகன் விஜய பிரபா கரன் என் மகளுடன் படித்துள்ளார், அவர்  எனக்கும் மகன் மாதிரிதான். சின்ன  பையன் எங்கிருந்தாலும் நன்றாக  இருக்க வேண்டும்” என்று ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.