tamilnadu

img

கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிப்பு எண்ணூரில் மாதர் சங்கம் போராட்டம்

சென்னை, மே 21- எண்ணூர் சுனாமி குடியிருப்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருவொற்றியூர் மண்டலம் 3ஆவது வார்டு சுனாமி குடியிருப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு எண்ணூர், எர்ணா வூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள மான கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனை க்காக வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாயன்று (மே 21) எர்ணாவூர் வள்ளுவர் நகர், மாகாளியம்மன் நகர், எர்ணீஸ்வரர் நகர் பகுதி கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காக வந்தபோது, கத்திவாக்கத்தில் உள்ள சுகாதார மையத் திற்கு சென்று அங்கு பதிவு செய்து பரிசோத னைகளை மேற்கொள்ளுமாறு செவிலி யர்கள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது அப்போது முதல் குழந்தைக்கு இங்குதான் பார்த்தோம், இப்போது ஏன் அங்கு போக வேண்டும் என கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகி யோர் அங்கிருந்த மருத்துவ அலுவலர் மாலதியிடம் கேட்ட போது, மருத்துவ அலுவ லரான  நாங்கள் என்ன செய்ய முடியும், இது  மேலிடத்து முடிவு என்று கூறியுள்ளார்.

அங்கு வந்த 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஏற்கெனவே எர்ணாவூரில் இருந்த மருத்துவமனையை இங்கு மாற்றி விட்டீர்கள். இப்போது எர்ணா வூர் பகுதி கர்ப்பிணி பெண்களை கத்தி வாக்கம் போகச் சொல்வது என்ன நியாயம். சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்கள் எப்படி போக முடியும். எர்ணாவூர் பகுதி கர்ப்பிணி பெண்களை கத்திவாக்கம் போகச் சொல்வது, அங்கு சென்றால் சுனாமி குடியி ருப்புக்கு போங்கள் என அலைக்கழிக் கப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மருத்துவ அலுவலர் மேல திகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி னார். பின்னர் இங்கேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், மக்கள வைத் தேர்தல் ஆணைய விதிமுறைகள் முடிந்தவுடன் எர்ணாவூரில் அமைந்திருக்கும் நல்வாழ்வு ஆரோக்கிய மையத்திலேயே கர்ப்பிணி பெண்களுக்கும் சிகிச்சை அளிக் கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;