tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள்  காத்திருக்கும் போராட்டம் வெற்றி

விழுப்புரம், ஜூன்6- விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கேயனூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க மறுக்கப்பட்டதை யொட்டி  வியாழனன்று 100நாள்வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நல சங்கம் சார்பில் காணை பிடிஒ அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை தாங்கி னார். போராட்டத்தில்  சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் எம்.முத்து வேல் ஆகியோர் கலந்து கொண்டு காங்கேனூர் ஊராட்சி யில் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பேசினர். உடனடியாக பிடிஒ மாற்றுத்திறனாளிகள் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்,பேச்சுவார்த்தையில் வியாழக் கிழமை மாலை 5 மணி அளவில் என்எம்ஆர் வழங்கப் படும் என உறுதி அளித்ததில் பேரில் உடனடியாக மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் கே குமரன் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம், ஜூன் 6 - காஞ்சிபுரம் மாவட்டம், ஆற்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் அங்குள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் தொழிலகத்தில் பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்பாக்கம் மண்டபம் கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் குமார், இவர் திருவண்ணாமலை மாவட்டம், மாங்கல்ய அடுத்த சோழவரத்தில் உள்ள கல்குவாரி யில் பணிசெய்து வருகிறார்.

இந்நிலையில் வியாழனன்று கல்குவாரி விடுமுறை என்பதால் அவரது வீட்டின் எதிரே உள்ள தீனா வாட்டர் சர்வீஸ் கடைக்கு சென்று லாரி ஒன்றிற்கு வாட்டர் சர்வீஸ் செய்து விட்டு வாட்டர் கன் எடுத்து ஸ்டாண்டில் வைக்க சென்றபோது அருகில் இருந்த பியூஸ் கேரியரில் மேற்படி வாட்டர் கன்னில் (Water Gun) பட்டு ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். உடனே 108 ஆம்புலன்ஸ் வர வழைத்து பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மாகரல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கபட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு மின்சாரம் தாக்கி இருந்த குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சி புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் அவதூறு: ஒப்பந்ததாரர் கைது

காஞ்சிபுரம், ஜூன் 6 – தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல் வெளியிட்ட ஒப்பந்தக்காரர் உட்பட இருவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவி வகித்து வரு கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையராக இருந்தபோது, ஒப்பந்தக்காரர் சுடர்மணி என்பவர் விதிமுறைகளை மீறி பணி செய்யாமல் இருந்ததால், அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதனால் சுடர்மணி, அவரது நண்பர் மன்னார்குடியை சேர்ந்த பாலு இருவரும் சேர்ந்து மகேஸ்வரி குறித்து வாட்ஸ் -அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆணையர் மகேஸ்வரி தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஒப்பந்தக்காரர் சுடர்மணி மற்றும் பாலு இருவர் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் (ஜூன் 5) புதனன்று தஞ்சாவூர் காவல்துறையினர் காஞ்சிபுரத்தில் இருந்த ஒப்பந்ததாரர் சுடர்மணியை விசாரணைக்கு கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு

ராணிப்பேட்டை, ஜூன் 6 - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் வியாழனன்று (ஜூன் 6) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு அதிகாரிகள் ந.சுரேஷ், க. லோகநாயகி, மு ப. உஷா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

;