சென்னை, ஜூன் 8- சென்னை – கோவை சேரன் விரைவு ரயில் பயணிகளை, துணை ராணுவ படையினர் போதையில் தாக்கிய சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தில் இருந்து கோவைக்கு வெள்ளி யன்று இரவு சேரன் விரைவு ரயில் புறப்பட்டது.
ரயிலின் முன்பதிவு செய் யப்படாத பெட்டியில் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் ஏறியுள் ளனர். அவர்கள் ரயிலில் இருந்தபடியே மது அருந்திவிட்டு, போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவப் படை வீரர்களின் ரகளையால் தூக் கம் இல்லாமல் பயணிகள் அவதிப்பட் டுள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, பயணிகளை மிரட்டியுள் ளனர். மேலும், எங்களையே கேள்வி கேட்கிறீர்களா? என ஆபாச வார்த் தைகளால் பேசியதுடன், காலணிகளை கொண்டு பயணிகளை தாக்கியுள்ள னர்.
இதில் இரண்டு பயணிகள் காயம டைந்துள்ளனர். மேலும், துப்பாக் கியை காட்டியும் பயணிகளை மிரட் டியுள்ளனர். இதனால் ஆவேசம டைந்த பயணிகள், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே அபாய சங்கி லியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி னர். தொடர்ந்து, ராணுவ படையினர் நடந்த விதம் குறித்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்க ளிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும், துணை ராணுவ படை வீரர் களை ரயிலில் இருந்து இறக்கி விடுமா றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட துணை ராணுவ படை வீரர்களை ரயில்வே காவலர்கள் ரயிலில் இருந்து இறக்கி விட்டனர். அதைத்தொடர்ந்து ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென் றது. இது தொடர்பான வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.