tamilnadu

img

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கஞ்சித்தொட்டி திறப்பு

கண்டாச்சிபுரம். செப். 9-  கிராமப்புற வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் 100 நாள் வேலையை அனைத்து குடும்பங்களுக்கும் முறை யாக வழங்கக்கோரி கண்  டாச்சிபுரம், ஒதியத்தூர், மேல்வாலை ஊராட்சி களை சேர்ந்த ஏராளமான  பெண்களும், பயனாளிக ளும் கண்டாச்சிபுரம் ஊராட்சி  மன்ற அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சிகளில் குடிநீர்  வசதி, தெரு மின்விளக்கு வசதி, சாலை வசதி மற்றும்  ஏரி, குளங்களில் குடிமரா மத்து பணியினை துவக்கி புதுப்பித்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தி கஞ்சித்  தொட்டி திறப்பு போராட்டம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டாச்சிபுரம் கிளைச் செயலாளர் எம். பாபு, வட்டக்குழு உறுப்பி னர்கள் ஏ.ஜான்போஸ்கோ, பி.முருகன் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.  சிபிஎம் விழுப்புரம் தெற்கு  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.வேல்மாறன், வட்டச்  செயலாளர் எம்.முத்துவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  பின்னர் முகையூர் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர், காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வா ளர் உள்ளிட்ட அதிகாரிகள்  போராட்ட தலைவர்களுடன்  நடத்திய பேச்சுவார்த்தை யில் “100 நாள் வேலையை  உடனடியாக வழங்கி குடி மராமத்து பணிகளை முறை யாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, உடன்பாடு ஏற்  பட்டதால் போராட்டம் முடி வுக்கு வந்தது.