tamilnadu

ஆம்னி பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

சென்னை, மே 30- ஆம்னி பேருந்துகள் ஜூன் 1 முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னையில் தற்போது ஆம்னி பேருந்து கள் உயர் நீதிமன்ற இடைக்கால உத்தர வின்படி மாநகருக்குள் இருந்து இயக்கப் பட்டு வரும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் மிகப்பெரிய பேருந்து நிலையம் இயங்கி வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னையின் புறநகர் பகுதியில் கிளாம் பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த புதிய பேருந்து முனையம் மக்களின் பயன் பாட்டிற்கு வந்தது.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட உடன் அனைத்து பேருந்துகளும் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செயல்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதற்கு சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு போதுமான இடவசதி இல்லை என குற்றம் சாட்டி கிளாம் பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆம்னி  பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகர த்தில் உள்ள அவர்களது பணிமனைகளில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனு மதி கோரியதை அடுத்து, ஜூன் 2ஆம் தேதி வரை சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வர நீதிமன்றம் உத்தரவிட்டு போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் முடிச்சூ ரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பள வில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த தனி இடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகை முறை யில் பேருந்துகள் நிறுத்த ஏற்பாடுகள் செய்ய ப்பட்டு உள்ளதாகவும், எனவே மே 31 ஆம் தேதிக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி முதல் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கேளம்பாக்கத்தில் இருந்து  இயக்கப்பட வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித் துள்ளனர். அதன்படி ஜூன் 1 முதல் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி  பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை திட்டவட்டமாக அறி வித்துள்ளது.

;