கிருஷ்ணகிரி, டிச. 23- கெலவரப்பள்ளி ஊராட்சி சித்தனப்பள்ளி, சின்ன குள்ளு, பெரியகுள்ளு, கெலவரப்பள்ளி, புனுகன் தொட்டி, சிக்கரிப்பாளையம் உட்பட 7 கிராமங்களில் 9 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டப் பொருளாளர் பி.ராஜாரெட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் விவசாயிகள் சங்கம் மூலம் பல போராட்டங்கள் நடத்தி டாஸ்மாக் கடையை அகற்றவும், யானைகள் நடமாட்டம், பயிர்ச்சேதங்கள், உயிர்ச் சேதங்களை தடுத்திடவும், வீட்டு மனைகளுக்கு பட்டா கிடைக்க வும், விவசாயிகளுக்கு அரசு மானியங்கள், கடன், இடு பொருட்கள் நியாயமாக கிடைக்கச் செய்தவர். மேலும் சித்தனப்பள்ளி கெலவரப்பள்ளி சாலைகளை சீர மைக்கக் கோரி மறியலில் ஈடுபட்டு சாலை அமைக்க ஆணை பெறப்பட்டது முதல் பல பிரச்சனைகளுக்கு போராடி தீர்வு கண்டவர். அவர் கூறுகையில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் உடனடியாக தார்ச்சாலை அமைக்கவும், புனுகன் தொட்டி, பெரியகுள்ளுவுக்கு இரண்டு ரேசன் கடை களும், பெரியகுள்ளு, கெலவரப்பள்ளிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் கிடைக்கவும், அரசு மேல்நிலைப் பள்ளி, ஏழை மக்க ளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கிடைக்க பாடுபடு வேன் என்றார்.