tamilnadu

img

புரட்டி எடுக்கும் கனமழை.... 6 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற ‘நிவர்’ புயல்...

சென்னை:
வங்கக் கடலில் உருவான நிவர் புயலானது செவ்வாய்க்கிழமை நவம்பர் 24 அன்று ஆறு மணி நேரம் ஒரே இடத்தில்நிலைத்து நின்றது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

அதி தீவிரம்...
அந்தப் புயல் நவம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை நண்பகலில் மணிக்கு 11 கி.மீ வேகத்தில்  நகர்ந்து அதிதீவிரபுயலாக வலுப்பெற்றது. வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்தது.அதன் படி, நிவர் புயல் நகர்ந்து வரும்பாதையில் எந்த மாற்றமும் இல்லை. புதுச்சேரி அருகே  புதன்கிழமை இரவு 8 மணிக்குபிறகு அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலை ஐந்து மணி நிலவரப்படி நிவர் புயல் சென்னைக்கு அருகாமையில் 90 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடக்க நிலப்பகுதியை நோக்கி 15கி.மீ. வேகத்தில்நகர்ந்து கொண்டிருந்தது.  இதனால் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாமல்லபுரத்தில் வழக்கத்தைக் காட்டிலும் கடல் சீற்றம் அதிகமானது. குறிப்பாககடந்த 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு 40 முதல் 50 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து உக்கிரத்துடன் அச்சுறுத்தியது.சுமார் 40 அடி உயரத்திற்கும் ஆர்ப்பரித்த அலைகளைப் பார்த்து மீனவர்கள்வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். காற்றின் வேகம் நேரம் செல்லச்செல்ல அதிகரித்து நிலப்பகுதியை நோக்கி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதி தீவிரபுயலாக மாறிய நிவர் கடலூர் மாவட்டம் அருகே பிச்சாவரம் - பரங்கிப்பேட்டை இடையில் அதன் வெளிச் சுற்று நிலப்பகுதியை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை
நிவர் புயலால் தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தத்தளிக்கும் சென்னை
யலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் மூழ்கின.சென்னையில் பொதுமக்கள் அதிகம் செல்லும் மெரினா கடற்கரை மழை நீரில் மூழ்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைர லாகின.

பழமையான தர்கா இடிந்தது
சென்னை அண்ணா சாலை எல்ஐசி அருகே 650 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்கா  இடிந்து விழுந்தது. இதனால் அங்குபொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள் முழுவது மாகச் சேதமடைந்தன. ஒருபுறம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்க மறுபுறம் பலத்த காற்றும் வீசத் துவங்கியது இதனால் சென்னை மாநகரின்பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.கிண்டி கத்திப்பாரா பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. சாலைகளில் வழிந்தோடும் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டேஇருந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கடல் கொந்தளிப்பு
புயலின் தாக்கத்தால் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குக் கடற்கரைச் சாலை முழுமையாக முடக்கப் பட்டது.கடலில் அலை 23 அடி உயரத்திற்கும்மேல் எழும் என்பதால் மீனவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மாவட்ட நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியில் காற்றின் வேகம் வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

155 கி.மீ. வேகக் காற்று
புயல் கரையை கடக்கும் முன்பு சுமார்155 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக சூறைக் காற்று வீசும் என்பதால் குடியிருப்புகள், குடிசை வீடுகள், விளம்பர பதாகைகள் அனைத்தும் அடித்துச் செல்லவாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப் பட்டது.மேலும் தென்னை, பப்பாளி மரங்கள்,மின்கம்பங்கள் அடியோடு சாயும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

பாலச்சந்திரன் பேட்டி
இந்நிலையில் சென்னையில் பிற்பகல் 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குனர் பாலச்சந்திரன், “நிவர் புயல்கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்தில்படிப்படியாக வலுவிழந்து புயலாகவும்,அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டின்உள் மாவட்டங்களான திருவண்ணா மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கன மழையும், ஒருசிலஇடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்” என்றார்.மணிக்கு 65ல் இருந்து 75 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நவம்பர் 26ஆம் தேதி மணிக்கு 55 முதல் 65 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கூரை வீடுகள் மற்றும் குடிசைகள், மேற்கூரைகள் பாதிப்புக்குள்ளாகும். மின் இணைப்புகள் மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படலாம்.மண் சாலைகள், தார் சாலைகள் வெள்ள நீரால் பாதிக்கப்படும். மரங்கள்வேரோடு சாயும் நிலை ஏற்படலாம். வாழை, பப்பாளி மரங்கள், பயிர் வகைகள்பாதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.புயல் கரையை கடந்த பிறகு 26ஆம் தேதி பால் விநியோகம் தடையின்றி நடைபெறும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதி தீவிர புயலாக மாறிய நிவர் கரையைக் கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் மின் வாரியம் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளது.  இருந்தாலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேவரவேண்டாம் என்றும் சாலையில் நடமாட வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

;