tamilnadu

img

கொலை மிரட்டல் பதிவுகள் வருத்தமளிக்கிறது - பிரதீப் ஜான் 

தமிழகத்தில் வானிலை ஆய்வாளராக இருந்து வரும் பிரதீப் ஜானுக்கு சில சமுக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது போன்ற பதிவுகள் எனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது என பிரதீப் ஜான் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நான் ஒரு சாதாரண ஆள்.சிலரின் அநாகரிகமான பேச்சுகள் என் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இது, வருத்தமளிப்பதாக உள்ளது. நான் யாரிடமும் என் பதிவுகளை பின்பற்றுமாறு கேட்பதில்லை. என் பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் புறக்கணித்துவிட்டு செல்லலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.

மழை மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் பிரதீப் ஜான். வானிலை அறிக்கையை வெளியிட்டு சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவரது தமிழ்நாடு வெதர்மேன் என்ற ஃபேஸ்புக் பக்கம், இணைய பக்கங்கங்களையும் ட்விட்டர் பக்கங்களையும் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கான ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான்.