சென்னை, மே 16- ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாண வர் தனுஷ் (23) தூக்கிட்டுத் தற் கொலை செய்துகொண்டார்.
வட சென்னை மாவட்டம், கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகரை சேர்ந்த தனுஷ் ஆவடி யில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்தார். அவர் ஆன்லைன் ரம்மி யில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து விளையாடி வந்துள் ளார்.
இந்நிலையில், படுக்கை அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர், அருகில் உள்ள ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப் படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் மின்விசிறி யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து தனுஷ் உடலை கைப்பற்றி அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த போலீ சார், தனுஷின் செல்போனை ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி யுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுக்களுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 நவம்பர் 10 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், மேல் முறையீடு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த 6 மாதத் தில் மட்டும் ஆன்லைன் சூதாட் டத்திற்கு பலியானோரின் எண் ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.