சென்னை:
தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப் போம் என உறுதி ஏற்றுள்ளார்.
சுயமரியாதை, சமத்துவம், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை என தன் உயிர் நீங்கும் வரை போராடிய, சமூகத்தில் பல மாற்றங்களை கொணர்ந்த தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாள் வியாழனன்று(டிச.24) அனுசரிக்கப் பட்டது.திமுக தலைவரும் தமிழ் நாடு சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, மா. சுப்பிரமணியன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ள அவர், “சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று”“சமூக அடிமைத்தனம் தொடரும் வரை - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவுகூரப்படுவார்! அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப் போம்” என உறுதி ஏற்றுள்ளார்.திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கி.வீரமணி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.