tamilnadu

img

மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுப்போம்.... ஆவணப்படம் வெளியீட்டு விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை:
தமிழகத்தில் மார்க்சியத் தத்துவத்தை வளர்த் தெடுக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.காரல்மார்க்சின்  மூலதனம் உருவாக பெரும்பங்காற்றிய தோழர் ஏங்கெல்ஸ் ஆவணப் படம் வெளியீட்டு விழா சென்னை பெரம்பூர் குக்ஸ் சாலை  ஏ.பி நினைவகத்தில் சிபிஎம் போக்குவரத்து அரங்கம்  உபக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (நவ.28) நடைபெற்றது.

ஏபி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா வில் ஏங்கெல்ஸ் ஆவணப் படத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.இந்நிகழ்வில் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-காரல் மார்க்சின் தத்துவ நூலான மூலதனத்தை ஒழுங்குபடுத்தி முன்னுரை எழுதி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய  ஏங்கெல்ஸ் பணி மிக அற்புதமானது. மார்க்சிய தத்துவத்தில் காரல் மார்க்சுக்கு ஈடாக ஏங் கல்சுக்கு பங்கு உள்ளது. ஏங்கெல்சால் தான் மார்க்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது.

மாற்று தத்துவம்...
சிறந்த விஞ்ஞானிகள் கூட புரிந்துகொள்ளமுடியாத ஞானத் தையும்  உலக முதலாளித்து வத்திற்கு எதிரான மாற்று தத்துவ அரசியலையும் ஏங்கெல்ஸ் அறிந்திருந்தார். சோசலிச கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் மனிதக்குலத்திற்கு பல நன்மைகள் செய்ய முடிகிறது.

மக்களை நேசிக்கும் அரசுகள்...
உலகையே குலுக்கும் கொரானா அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட உயிர்  பொருளாதாரத்தையும் சுக்கு நூறாகி விட்டது. ஆனால் சோசலிசத்தை உயர்த்தி பிடிக்கும் சீன நாட்டில் உயிரிழப்பும் பொருளாதார பாதிப்பும் மிக சொற் பமே. இதற்கு காரணம் மக்களை நேசிக்கும் அரசு அமைந்து இருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் தடுமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இடது பொருளாதாரக் கொள் கையை பின்பற்றும் நாடுகள் நிலைத்து நிற்பதுதற்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வகுத்துதந்த தத்து

வமே காரணம். சோசலிச கியூபா, உயிர்சேதமின்றி மக்களை காப்பாற்றிவிட்டது. வியட்நாம் மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாத்து விட்டது.  கம்யூனிசம், சோசலிசம் என்பது நாம் உருவாக்குவது அல்ல. மனித சமுதாய வளர்ச்சியின் முக்கிய கூறு. அது இயற்கையின் விதி. அதற்கான அற்புதமான பாதையை உருவாக்கியவர்கள் ஏங்கெல்சும், மார்க்சும் தான்.

சோசலிசமே...
தமிழகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பே ‘வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பசியை பற்றி பேசிய வள்ளளார் தத்துவமும், சங்கக் காலத்தில் பாடிய ‘பிறப்பிற்கும் எல்லாம் தலை’ மற்றும் கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என பாடியதும் சோசலிசம் தான்.

உலகில் எல்லா மதங்களும் சொத்துடமையை பாதுகாக்கும் கருவியாக இருக்கிறது என்று ஏங்கெல்ஸ் எழுதியது இன்றும் உண்மையாகி வருகிறது. மதம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பெரியாரின் போராட்டமும் இதை தான் சொல்கிறது. வர்க்கம், சமூக அநீதி, சுரண் டல் , சொத்துடமை, பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்படவேண் டும் என்று கூறியது மார்க்சியம் தான். பொருளாதார மற்றும் தொழிற் சங்க போராட்டத்துடன் சமூக மாற்றத்திற்கான தத்துவார்த்த  போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.
இந்திய வரலாற்றில் மிகப் பெரிய தத்துவார்த்த போராட் டம் நடத்த மண் தமிழ் மண். பௌத்தம், சமணம், வைணவம்,திராவிடம் இவற்றிக்கிடையில் தத்துவப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது.தமிழகத்தில் மார்க்சியத்தத்துவம் வளர்த்தெடுக்க வேண்டும் அதற்கான பணியை நாம் முன்னெடுக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக ஏங்கெல்ஸ் ஆவணப்படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் பேசுகையில், “ஏங்கெல்சின் 200 பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுவது சாலச் சிறந்தது. கம்யூனிச கருத்துக்களை கற்றறிந்தவர்கள் கூட ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் படித் தால் கருத்தியில் ரீதியான மாற்றத் திற்கு உள்ளாவார்கள்” என்றார்.

தான் வாழ்ந்த கடைசி 10 வருடத்தில் தான் ஏங்கெல்ஸ் மூலதனத்தின் 2, 3 வது பதிப்புக்களை வெளியிட்டார்.4வது பதிப்பு வெளியிடுவதற்குள் அவர் மறைந்துவிட்டார். சமூக மாறுதலுக்கு உட்பட்டு மார்க்சிய கருத்துக்கள் சில மாற்றத்திற்குள்ளாகும் என்பதை மார்க்சிஸ்டுகள் உணர்ந்துள்ளனர் என ஏங்கெல்ஸ் தெளிவுப் படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.150 ஆண்டுகளாக முதலாளித்துவத்தின் மோசமான கொள்கைகள் இன்னும் தொழிலாளர்களை வதைப்பதால் மார்க்சியம் கூறிய கருத்துக்கள், தத்துவம் இன்றளவு உயிர்ப்போடு இருப்பதை அறிய முடிகிறது.தொழிலாளி வர்க்கப் போராட் டம் வன்முறை அல்ல. அது ஒரு வடிவம் என்பதை நாம் உணர வேண்டும். தொழிலாளி வர்க்கம் கம்யூனிச சித்தாந்தத்தை முன்னெடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் என்பது வயல், தொழிலாளி வர்க்க அரசியல் என்பது நாற்றுங்கால் போன்றது.கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த தொழிலாளி வர்க்கம்  நல்லத்தலைமையை வகுத்துகொடுக்க வேண்டும் என்றும் சவுந்தரராசன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், ஆவணப்படத்தை தயாரித்த அனைவருக்கும் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார்,  தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வி.தயானந்தன்,  ஜி.செந்தில் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

;