tamilnadu

ஆட்சி மாற்றம் நிகழட்டும் - தமிழகம் நிமிரட்டும்.... 1ம் பக்கத் தொடர்ச்சி...

மக்களின் இடஒதுக்கீடுபறிப்பு, ஒரேநாடு,ஒரேதேர்தல் என்ற பெயரில் ஜனநாயகத்தின்சக்கரத்தை உடைக்க முயற்சி,  குடியுரிமைச் சட்டதிருத்தம்  என்கிற  பெயரில்  சிறுபான்மை மக்களின் குறிப்பாக பெரும்பகுதி இஸ்லாமியமக்களின் குடியுரிமையை பறிக்கமுயற்சி,  நரவேட்டையாடப்படும் சிறுபான்மைமக்கள், தொடர்தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர். 

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி தரத்தக்க வகையில்அதிகரிக்கிறது. ஒரேநாடு, ஒரே மொழி என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்திணிப்பு, தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகள்புறக்கணிப்பு உள்ளிட்டு இந்திய திருநாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுகிறது.  ரயில்வே, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்ப்பு, வேலைவாய்ப்புகள் முற்றாகபறிப்பு என நாசகரபாதையில் நாட்டை நடத்திச்செல்கிறது மத்திய பாஜக கூட்டணி அரசு. 

அதிமுக ஆட்சியின் அவலம்
தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளியஅதிமுக ஆட்சி பாஜகவின் தப்புத்தாளங் களுக்கு ஏற்ப ஆட்டம்போடும் அதிமுக ஆட்சியில் தமிழகம் இழந்தவை ஏராளம். அனைத்துத்துறை களிலும்கீழிருந்து, மேல்வரை ஆலவட்டம் போடும் லஞ்சலாவண்யம், கொரோனா காலத்திலும் கொடிக்கட்டி பறக்கும் ஊழல். இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நேர்மையான இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினமா செய்துள்ள அவலம், இருந்த வேலையையும் பறித்தது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளும் முடக்கம். கொரோனா காலத்தில் உயிரைபணயம்வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை தரமறுப்பது, தூத்துக்கு டிஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர்படுகொலை, எட்டுவழிச்சாலை, ஆறுவழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்கள் பறிப்பு, நூறுநாள் வேலைத்திட் டத்தை முறையாக செயல்படுத்த மறுப்பு, சாத்தான்குளம் படுகொலை உட்பட காவல்துறை அத்துமீறல் ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற எதேச்சதிகார நடவடிக்கையில் அதிமுக அரசு செயல்பட்டுவருகிறது. 

வேலையின்மை அதிகரிப்பு
மேலும் மின்வாரியத்தை தனியார்மயமாக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எதிர்த்து மின் ஊழியர்கள் போராடி வெற்றிபெற்றுள்ளனர். மின்வாரியம் உள்பட அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மறுபக்கம் தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலையின்றி தவித்துவருகின்றனர். அதேபோல, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், நீட்தேர்வு, இந்தி,சமஸ்கிருததிணிப்பு, மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரிபங்கீடுஉள்ளிட்ட பல்லாயிரம் கோடி நிதியை தரமறுப்பது,  பட்டியலின – பழங்குடி  மற்றும்பிற்படுத்தப்பட்ட  மாணவர்களின்  உயர்கல்விபடிப்புக்கான  போஸ்ட்  மெட்ரிக் கல்வி உதவித்தொகை  திட்டத்தை  ஒழித்துக் கட்டுவது  போன்ற  மத்திய  அரசின்  மக்கள்  விரோத  கொள்கைகளுக்கு  எதிர்ப்புதெரிவிக்க திராணியற்று  ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக  கண்ணை  மூடிக்கொண்டு  ஆதரவளித்து  தமிழக  நலன்களையும், மக்களையும்  அதிமுக  அரசு  படுபாதாளத்தில்  தள்ளிவிட்டுள்ளது.  

ஆட்சி மாற்றம் நிகழட்டும்!
தமிழகத்தை  வஞ்சித்து வரும்  அதிமுக  அரசை  அகற்றுவோம்,  பாஜகவை நிராகரிப்போம்- ஆட்சி மாற்றம் நிகழட்டும்!  தமிழகம்  நிமிரட்டும்!  என்ற  முழக்கத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 2021டிசம்பர் 25-31 ஆகிய தேதிகளில்  ஒரு வார காலம் மாபெரும் மக்கள்  சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் முழுவதும் களமிறங்கி, 10 ஆயிரம் குழுக்கள் கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை வீடு, வீடாகச் சென்று  மக்களைச் சந்தித்து  50  லட்சம் துண்டுப்பிரசுரம் விநியோகித்து அதிமுக – பாஜக  அரசின்  மக்கள்  விரோதக் கொள்கைகளை  அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். நாட்டு நலனையும், மக்கள்நலனையும், தமிழகத்தின்  எதிர்காலத்தையும் பாதுகாக்க மாற்றுப்பாதைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்  இவ்வியக்கத்திற்கு தமிழக மக்களும்,  ஜனநாயக அமைப்புகளும் பேராதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கொரோனா காலத்தில் மாதம் 7500 ரூபாய் கொடுக்க சொல்லி கேட்டோம். ஆனால் கருணையற்ற முதல்வர் கொடுக்கவில்லை. மக்கள் பட்டினி கிடக்கும் போது கொடுக்க மறுத்த முதல்வர் இப்போது 2500 ரூபாய் கொடுக்கின்றார். சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டுதான் பொங்கலுக்கு பணம் கொடுக்கும் திட்டத்தை, தனதுபிரச்சாரம் துவங்கும் போது முதல்வர்செயல்படுத்துகின்றார் என குற்றம்சாட்டி னார்.  மேலும்,  அதிமுக - பா.ஜ.க கூட்டணியில்  சமரசமற்ற போர் நடக்கின்றது என்பதுஅவர்களின் செயல்பாடுகள் மூலம் தெரிகின்றது.  அது கொள்கையற்ற கூட்டணி, கூட்டணியில் இருக்க வேண்டிய கட்டாயம் நெருக்கடி ஏற்படுத்தபட்டுள்ளது.  ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி மீது மக்கள் கோபம் அடைந்திருக்கின்றனர். இவர்கள் பணம்கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றலாம் என்பது பகல் கனவாகவே முடியும். ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிமுக பாஜகவிற்கு எதிரான மனநிலையில் உள்ள போதுஅதனை ஒருமுகப்படுத்துவதற்கு மாறாக தனியாக போட்டியிடுவது என்பது இவர்கள் எந்தபக்கம் என்பது தெரிய வருகிறது. மக்கள் நீதிமய்யம் கட்சி கமல்ஹாசனின்  கட்சி தேர்தலில் ஓட்டுகளை பிரிக்கதான் பயன்படும். 

ரஜினி அரசியல் கட்சி துவங்கினால் அது திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது அதிமுக, பாஜகவைத்தான் பலவீனப்படுத்தும். மேலும் சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள் என்றார். முன்னதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி ஆகியோர் உடனி ருந்தனர்.

;