சென்னை, மே 18 - உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, “சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப் பார்கள்; குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார்” என்று இந்து பெரும் பான்மை மதவெறியைத் தூண்டி விட்டார்.
அதற்கு முன்னதாக, “தென்னிந்தி யாவில் இருப்பவர்கள் உ.பி. மக்களை மோசமாக பேசுகின்றார்கள். இதை நாம் மறக்கக் கூடாது, மன்னிக்கக் கூடாது” என்று உ.பி. மக்களின் வாக்கு களுக்காக பிரிவினை வாதத்தை தூண்டியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுகளுக்கு தற்போது நாடு முழு வதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சி களின் தலைவர்கள் கடும் கண்ட னங்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வகுப்புவாத பேச்சு குறித்து கருத்து தெரிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “தோல்வி பயத்தால், தான் முதலில் கூறிய கேரண்டிகளை கை விட்டு, தீவிரமான வகுப்புவாத அணி திரட்டலுக்கு மோடி திரும்பினார்; அதுவும் பின்னடைவு என்பதை உணர்ந்ததும் தான் சொன்ன விஷயங் களையே மறுக்கிறார்; எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வி உறுதியாகிவிட்டது; இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பொய்கள் உடைபடும்; இந்தியா வெல்லும்
இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலினும், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ‘தோல்வி பயம் என்ன செய்யும்?’ என்று கேள்வி எழுப்பி, “பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றி யைப் பொறுத்துக்கொள்ள முடியா மல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநி லங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்! ஜூன்-4 இந்தப் பொய்கள் உடை படும்! வெறுப்பு அகலும்! #INDIA (இந்தியா) வெல்லும்!” என்று பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு சிறுமை
“பாஜக தலைவராக மோடி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், 140 கோடி இந்தியர்களுக்கு பிரதமராக இருக்கிற ஒருவர் இப்படி தரம் தாழ்ந்து, சட்டத்திற்கு விரோதமாக நான்காம் தர அரசியல்வாதியாக பேசுவதன் மூலம் தாம் வகிக்கிற பதவியை நாளுக்கு நாள் சிறு மைப்படுத்தி, கொச்சைப்படுத்தி வரு கிறார். இத்தகைய பேச்சுகளை மதநல்லி ணக்கத்தில் நம்பிக்கையுள்ள எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
2014 மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புல்வாமா, பாலகோட் ராணுவ தாக்கு தலை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடி, 2019 தேர்தலில் வெற்றி பெற்ற தைப் போல 2024 தேர்தலில் ராமர் கோயிலை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு கண் டார். அந்த கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் மதரீதி யாக மக்களை பிளவுபடுத்தி வன்முறை அர சியலுக்கு தூபம் போடுகிற வகையில் புல்டோசர் தாக்குதல் குறித்து பேசு கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பிரதமர் மோடியைச் சாடியுள்ளார்.
பொய்யுரைக்கு பதிலடி கிடைக்கும்
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழு வதும் பொது சிவில் சட்டத்தை கட்டாய மாக அமல்படுத்துவோம் என்று மோடி யும், அமித்ஷாவும் பேசி வருவது முஸ் லிம்களுக்கு எதிரானது தானே? நாடாளு மன்றத் தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டி ருக்கிற போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை இப் போது வெளியிட்டு இந்தியாவில் இந்துக் களின் மக்கள் தொகை 84 சதவீதத்திலி ருந்து 78 சதவீதமாக குறைந்துவிட்டது என கூறியது எதனால்? ஆனால், தற்போது இந்து – முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கி னால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடு வேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் அள்ளி வீசி வரும் அவதூறுகளை யும், பொய் உரைகளையும் புறக்கணித்து இந்திய நாட்டு மக்கள் மக்களவைத் தேர்த லில் தக்க பதிலடியை கொடுப்பார்கள்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வெறுப்புரை மீது எடுத்த நடவடிக்கை என்ன? தில்லி போலீசாருக்கு நீதிமன்றம் கேள்வி
கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம் மக்களை ஊடுருவல்காரர்கள் என்று கூறினார். மேலும் கூறுகையில்,”காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தை கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்கு கொடுப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகர்புற நக்சல் மனப்பான்மை. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் தாலியை கூட விட மாட்டார்கள். மன்மோகன்சிங் சொன்னபடி, சிறுபான்மை யினருக்கு தான் நாட்டின் சொத்தில் முதல் உரிமை என்றால், அந்த நகைகளை யாருக்கு கொடுப்பார்கள். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்குதான் கொடுப்பார்கள்” என்று கூறினார்.
தற்போது வரை தனது வகுப்புவாத பிரச்சாரத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்நிலையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வகையில் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் குர்பான் அலி தாக்கல் செய்த மனு சனியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெருநகர மாஜிஸ்திரேட் (எம்எம்) கார்த்திக்,”தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீது அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதே விவகாரத்தில் வேறு புகார்கள் வந்துள்ளதா? விசாரணை எந்த நிலையில் உள்ளது?” என சரமாரி யாக கேள்வி எழுப்பி, தில்லி காவல்துறை விரைவில் பதி லளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 5க்கு ஒத்திவைத்தார்.