tamilnadu

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

ரோஜா வழக்கில் குற்றவாளியின் பிணை மனு நிராகரிப்பு

காஞ்சிபுரம், ஜன.10- கடந்த நவம்பர் 28ஆம் தேதி  காஞ்சிபுரத்தை அடுத்த ஆண்டி  சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா (19) என்ற தலித் இளம்பெண்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தனியார் தோட்டத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்து  கிடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி யது.  அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்  பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  விடுதலை சிறுத்தைகள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பல்வேறு அமைப்பு கள் சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இறந்த ரோஜாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்ப தற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகிnhர் ரோஜாவின் இல்லத்திற்கு சென்று அவர் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜேஷின் சார்பில் நீதிமன்றத்தில் பிணை மனு சமர்ப்பிக்  கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை (ஜன.9) செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அம்மனுவை எதிர்த்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள்  அசோக் , மதி ஆதவன், அசோக்குமார் வாதங்களை முன்வைத்தனர். கொலை சம்பந்தமான வழக்கு விவரங்களை ஆராய்ந்த பின்னர்  ராஜே ஷின் பிணை மனுவை வெள்ளிக்கிழமை (ஜன.10 ) தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கூடுதல் ரயில்பெட்டிகளை கோரிய இளைஞர்கள் மீது வழக்கு

வாலிபர் சங்கம் கண்டனம்

கூடுதல் ரயில் பொட்டிகள் கேட்டுப் போராடிய வாலிபர்கள்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்த மன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையிலிருந்து மேல்மரு வத்தூர் வரை மின்சார ரயில் இயக்க வேண்டும் என வாலிபர்  சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடிவரு கின்றது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் வேலைக்காக நாள்தோறும் சென்னைக்குச் சென்று வரு கின்றனர். ரயில் பெட்டிகளை கூடுதலாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டிய அரசு  போராடிய இளைஞர்கள் மீது வழக்குப்  பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குறியது. உடனடியாக வழக்கை திரும்பப் பெறுவதுடன் மேல் மருவத்தூர் வரை மின்சார ரயில்களும், பாண்டிச்சேரி பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்திட ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அபராத கட்டணங்கள் தள்ளுபடி  

 சென்னை, ஜன. 10- ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி  புத்தாண்டில் அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும்  குறைந்தபட்ச தொகை பராமரிக்க வில்லை என்றால் அதற்கு விதிக்கப்படும்  கட்டணங்களைத் தள்ளுபடி செய்கிறது.  மேலும், இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த  பரிவர்த்தனை கட்டணங்களையும் வழங்குகிறது. இது அதன்  சில வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்  பார்க்கப்படுகிறது. சேமிப்பு கணக்குக்கு ஆண்டுக்கு 7.5விழுக்காடு வட்டி மற்றும் நிலையான வைப்புத் தொகை களுக்கு ஆண்டுக்கு 8.25விழுக்காடு வரை வட்டி வழங்கு கிறது. மேலும்,மூத்தக் குடிமக்களுக்குக் கூடுதலாக 0.60  விழுக்காடு  வட்டி வழங்குகிறது. மேலும், மூத்த குடிமக்க ளுக்கு முன்கூட்டியே கணக்கை முடிப்பது மற்றும் பகுதி பணம் திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது என்று அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

செங்கல்பட்டு நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை

செங்கல்பட்டு, ஜன. 10- செங்கல்பட்டு நகராட்சியில் பணியா ளர்கள் பற்றாக்குறையால் பொதுமக்களின் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி பழைமை வாய்ந்த நகராட்சி.  சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் வளர்ந்துவரும் பகுதியாக உள்ளது. நக ராட்சிக்குட்பட்டு  ஒருலட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இந்நிலையில் நகராட்சியில் பணியா ளர்கள் பற்றாக்குறையால் நகரின் வளர்ச்சிப் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் குடிநீர் பணியாளர்கள் 6, சுகாதார ஆய்வாளர்கள் 4, சுகாதார மேற்பார்வை யாளர்கள் 5, மகப்பேறு உதவியாளர்கள் 2,  நகர அமைப்பு ஆய்வாளர் 1, வருவாய் ஆய்வாளர் 1, ஆயா 3, எலக்ட்ரிசன், 1,  ஒயர்மேன் 1, உதவியாளர் 1, பணி ஆய்வா ளர் 1, என காலிப்பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளது மேலும் துப்புரவு பணியாளர்கள் 75 பேருக்குப் பதிலாக 55 ஒப்பந்த ஊழியர்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு நகராட்சி நிர்வாகத்தில் ஏராள மான காலிப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பதால் நகர மக்களின் வளர்ச்சிப் பணிகள்  நடைபெறாமல் உள்ளது. செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக் கப்பட்டுச் செயல்பட்டுவரும் நிலையிலும்  நக ராட்சி நிர்வாகம் மெத்தனமாகவே செயல்  படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாற்று கின்றனர். குறிப்பாகச் சாலைகளில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள், எரி யாதா மின்விளக்குகள், பழுதடைந்த சாலைகள், சாலையில் சுற்றித்திறியும் கால்  நடைகள் என பிரச்சனைகளுக்குக் குறைவே இல்லாத பகுதியாக செங்கல் பட்டு நகரப்பகுதி உள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகளில் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.