சென்னை, ஜன. 18 - ‘உலகம் காணாத கார்ப்பரேட் முறைகேடு’ என்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை அதானி நிறு வனத்தின் பல்வேறு தகிடுதத்தங்களை வெளிப்படுத்தியது.
ஆனால், இந்தப் பிரச்சனையை நாடாளுமன்ற விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல், எதிர்த்துக் கேள்வி கேட்டவர்களை இடைநீக்கம் செய்தும், எதிர்க்குரல்களை முடக்கியும் அமுக்கப்பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசாங்கம். இந்த நிலையில், `ஹிண்டன்பர்க்’ அறிக்கையின் பின்னணியில் இந்த பிரச்சனையை விளக்கும் விதத்தில் ‘தி நெக்சஸ்’ (‘The Nexus’) என்ற ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் ஜனவரி 19 அன்று மாலை 5 மணிக்கு இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆவணப்படத்தை வெளியிடுகிறார்.