tamilnadu

img

கம்யூனிஸ்ட்டாக வாழ்வது மிகவும் கடினமானது.... அவர்களுக்கு பாட்டாளி வர்க்க நலனே பெரிது.... நூல் வெளியீட்டு விழாவில் திருச்சி சிவா எம்.பி., பேச்சு.....

சென்னை:
கம்யூனிஸ்ட்டாக வாழ்வது மிகவும் கடினமானது; அவர்களுக்கு அரசியலைவிட தொழிலாளி வர்க்க நலனே பெரிது என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்திருச்சி சிவா பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவைக் குழுத் தலைவரும்மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், மாநிலங்களவையில் 12 ஆண்டுகள் ஆற்றிய உரைகள் மற்றும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலை பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது. இந்த நூலை பிப்ரவரி28 ஞாயிறன்று சென்னை புத்தகக் காட்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வெளியிட, திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

‘மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் உரை’ தமிழில் வெளிவந்துள்ளது நல்லமுயற்சி. நல்லமனிதர்களின் பேச்சுக்கள் காற்றோடு கறையும், மங்கும், மறையும்; ஆனால் எழுத்துக்கள் நிரந்தரமானவை. அதன் காரணமாகத்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துதிருவள்ளுவர் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார். நாடாண்ட மன்னர்கள் பலர் அடையாளம் தெரியாமல் போனார்கள். ஆனால் ஏடாண்ட புலவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பது எழுத்தில் தான்.

கம்யூனிஸ்ட்டாக வாழ்வது கடினம்
பொதுவுடமை இயக்கத்தில் ஓய்வில்லாமல் பல தலைவர்கள் பேசியும் , தொண்டாற்றியும் இருக்கிறார்கள். ஆனால் பதிவுகள் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஆகிலம், தமிழ்ப் புலமை இருப்பவர்கள் எல்லாம் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பேசிவிட முடியாது, அதில் தலைசிறந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். உலகில் மிகவும் கடினமான ஒன்று இருக்கிறது என்றால் அது கம்யூனிஸ்டாக வாழ்வது தான். அதன் +ட்பாடுகளை பின்பற்றுவது, அதன்படி வாழ்வது எளிதல்ல. 1979ல் நான் மாணவர் பேரவையின் அமைப்பாளனாக இருந்தேன். மிசாவில் 2ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலைபெற்று வெளியே வந்தபோது எனக்கு 24 வயதுதஞ்சை சிறையில் கம்யூனிஸ்டு தோழர் களோடு பழகி நிறைய படிக்கத் துவங்கினேன்.  
அரசியலைவிட தொழிலாளி வர்க்க நலனே பெரிதுசிம்கோ தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்காக திருச்சி மெயின்கேட் தமிழ்ச்சங்கம்எதிரே டி.கே.ரங்கராஜன் காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டம் நடத்தினார். அந்தநேரத்தில் சிபிஎம், அதிமுக கூட்டணி அமைத்திருந்தது. போராட்டத்தை கேள்வியுற்று  திமுக சார்பில் போராட்டத்தைதொடர்ந்து ஆதரித்தோம். களத்திற்கு சென்று வாழ்த்தினோம். அங்கு அரசியலை விட டி.கே.ரங்கராஜனின் தொழிலாளி வர்க்க நலனே எங்களுக்கு பெரியதாக தெரிந்தது. எங்களோடு எதிரணியில் இருந்தாலும் டிகேஆரின் உரைகள் நாகரீகமாக இருக்கும்.

கம்யூனிஸ்டுகளின் எளிமை
சட்டம் இயற்றப்படுகிற நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கம்யூனிஸ்டுகள் அவசியம் இடம்பெற வேண்டும். தோழர் பிரகாஷ்காரத் போன்றவர்களை நாடாளுமன்றம் தவறவிட்டது. மக்கள் மீது அக்கறை கொண்ட அவரதுஉரைகள், வாதங்கள் மன்றத்தை வழிநடத்த ஏதுவாக இருந்திருக்கும்.   கம்யூனிஸ்டுகளின் எளிமை அனைவரையும் பிரமிக்கச்செய்கிறது. எளிமைக்கு இலக்கணமானவர்கள், கொள்கைப் பிடிப்போடு யாருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்கள். மாநிலங்களவை நடத்த அவைத் துணைத் தலைவரின் நாற்காலியில் அமர்ந்துவிட்டால் டி.கே.ரங்கராஜன் யாருக்கும் சலுகைகாட்ட மாட்டார், அங்கேயும் கறாரான கம்யூனிஸ்டாக நடந்துகொள்வார்.

கலகக்காரர் டி.கே.ரங்கராஜன்
கட்சியின் கொள்கைகளை குறித்தநேரத்தில் பொறுமையுடன் விளங்கச்சொல்வதில்  டி.கே.ஆர் வல்லவர். தற்போது மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் எங்களின்உரிமைகள் முன்பைப்போல் மதிக்கப்படுவதில்லை.  சட்டங்கள் கலந்துரையாடல் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்படுகின்றன. அண்மையில் வேளாண்மைச்சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம், குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சியினரின் குரல்கள் நசுக்கப்பட்டன.  இதனை இந்நூல் பதிவு செய்துள்ளது. உழைப்பாளிகள், போராளிவர்க்கத்திலிருந்து வரும் இதுபோன்ற தலைவர்களால் தான் மக்கள் குரல் வெளிப்படும். டி.கே.ஆர். வந்தார், பேசினார், போராடினார், கலகம் செய்தார், அவர்தொடாத பிரச்சனைகளே இல்லை என்கிற அளவிற்கு பணியாற்றினார். அவர் இந்த நூலில் ஒரு இடத்தில் திமுகவையும், காங்கிரசையும் சாடுகிறார். அது தான் கம்யூனிஸ்டு. சில்லறை வர்த்தகத்தில்  திமுக நிலைப்பாடு குறித்து பேசும் போதுமகாபாரதத்தில் வரும் கர்ணனை போலவும் ராமாயணத்தில் வரும்  கும்பகர்ணனைப்போல் தவறுகளை கண்டித்து விட்டு அவர்களுடனே இருக்கிறார்கள் என்று விமர்சிக்கிறார்.பொதுத்துறை பாதுகாக்கப்படவேண்டும், தனியார் முதலாளிகள் மேலாதிக்கம் அனுமதிக்கக்கூடாது என்பதில் சிபிஎம் நிலைப்பாட்டு டன் திமுக ஒத்துப்போகிறது. வருங்காலத் தில் இணைந்து தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை  மக்கள் மன்றத்தில் பேசுவோம். வருங்கால சந்ததியினர் மாநிலங்களவையில் நிகழ்த்தப்பட்ட உரைகளை ஆய்வு செய்து அறித்துகொள்ள ஏதுவாக இதுபோன்ற பதிவுகள் உதவும். இந்த பதிவுவெளிவருவதற்கு காரணமான தோழர் டி.கே.ஆர், அதற்கு துணைநின்ற ச.வீரமணி, ராமசுப்பிரமணி ஆகியோர் பணிகள்போற்றுதலுக்குரியவர்கள், பாரதி புத்தகாலத்திற்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்பேசியதாவது:

தமிழகத்தில் அரிய நூல்களை வெளியிடும் பணியை பாரதி புத்தகாலயம் மேற்கொண்டு வருகிறது. அதற்கு மகுடம்வைத்தது போல் தோழர் டி.கே.ரங்கராஜனின் மாநிலங்களவை உரை நூல் வெளியிடப் பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மசோதாவின் மீது மிகக்குறைந்த நேரத்தில் சிபிஎம் கருத்துக்களை பேசுவதற்கு தனித்திறமை தேவை. அதில் டி.கே.ரங்கராஜன் சிறப்பாக பணியாற்றினார். இலங்கை தமிழர் பிரச்சனை, தலித் மக்களின் உரிமை , பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல், காவிரி உரிமை மற்றும் 60 ஆண்டுகள் அரசியல் பிரச்சனைகள் குறித்து டி.கே.ரங்கராஜன் பதிவு செய்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் ஆற்றியபணியைவிட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்காக போராடியது மிகப்பெரியசாதனையாகும். கடலூரில் பிறந்து சர்க்கரைஆலைத்தொழிலாளியாக தொழிற்சங்கப் பணியை துவக்கியவர். தமிழக தொழிலாளி வர்க்கத்தின் தீரம்மிக்க போராட்டத் தளபதியாக பரிணமித்தவர்.   நாட்டுமக்களின் நலனுக்காக வீட்டையும் சொந்தங்களையும் உரியமுறையில் கவனிக்காமல் இருந்தாலும் அவரது இணையர் விஜயலட்சுமி அவர்கள் டி.கே.ரங்கராஜனை சுமைதாங்கியாக அரவணைத்து செயல்படுகிறார். மகத்தான இந்த தலைவரின் ஊக்கசக்தியாக செயல்பட்டவர்  அவரது துணைவியார் என்றால் அது மிகையல்ல. உயர்சாதி என சொல்லப்படுகிற வகுப்பில் அவர் பிறந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டுவருகிறார். தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிஸ்டாக திகழும் டி.கே.ரங்கராஜன் எங்களுக்கு நல்லவழிகாட்டியாக திகழ்வார்.இவ்வாறு அவர் பேசினார்.

;