சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு தூறல் மழை பெய்தது. இந்த சிறுமழைக்கே திருவான்மியூர் பேருந்து நிலையம் பயன்படுத்த முடியாத வகையில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்தை பாதிக்கும் சேற்றை அகற்ற வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் உள்ள அயனாவரம், வடபழனி, மகாகவி பாரதிநகர் உட்பட பல பேருந்து நிலையங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.