tamilnadu

img

பொது மேடையிலேயே உள்துறை அமைச்சருக்கு மிரட்டல்

மக்களவைத் தேர்தலுடன் கடந்த மே மாதம் நடை பெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக தெலுங்கு தேச தலை வர் சந்திரபாபு, துணை முதல்வ ராக ஜனசேனா தலைவரும், நடிக ருமான பவன் கல்யாண் பொறுப் பேற்றனர். பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டணி அமை த்து பல்வேறு கட்சி மற்றும் மாநில ஆட்சிகளில் குழப்பத்தை ஏற் படுத்தி  கவிழ்த்தது போல, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் ஆந்திர அரசுக்கும் பவன் கல்யாண் மூலம் நெருக்கடி அளிக்கும் வேலையை துவங்கி யுள்ளது பாஜக.

மோடியின் ஊதுகுழல்  பவன் கல்யாண்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறு வதற்கு முன்பு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார் பவன் கல்யாண். தேர்தல் வெற்றி க்குப் பிறகு அடிதடியுடன் துணை முதல்வர் பதவியை பெற்ற பவன் கல்யாண், அதன்பின் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவராக மாறினார். மாட்டுக் கொழுப்பு திருப்பதி லட்டு பிரச்சனையின் பொழுது சாமியார் வேடத்தை கையிலெடுத்த பவன் கல்யாண், பிரதமர் மோடியைப் போல ஏழு மலையான் கோவிலில் சிறப்பு ஷூட்டிங் உடன் விரதத்தை நிறைவு செய்தார். பவன் கல்யாண் சாமியார் வேடத்துடன் சுற்றிய பொழுது ஜனசேனா கட்சியினர் மட்டுமின்றி பாஜகவினரும் உடன் இருந்தனர்.

பெண் அமைச்சருக்கு மிரட்டல்

இத்தகைய சூழலில் திங்கள ன்று ஆந்திராவின் பிதாபுரத்தில் ரூ.5.52 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் அடிக்கல் நாட்டி னார். அப்பொழுது அவர் பேசுகை யில்,”ஆந்திராவில் எங்கு பார்த்தா லும் பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும். ஆனால் போலீசார் குற்றவாளி களை கைது செய்யாமல் உள்ள னர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. உள் துறை அமைச்சராக உள்ள அனி தாவும் பெரிய அளவில் எந்த மாற்ற மும் செய்யாமல் அமைதியாக உள் ளார். நான் உள்துறை அமைச்ச ராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலை க்கு கொண்டு வர வேண்டாம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும்” என பொது மேடையிலேயே பெண்ணான உள் துறை அமைச்சரின் பதவியை விமர்சித்தும், அவரை பதவியை விட்டு துரத்திவிடுவேன் என்பது போல மிரட்டல் விடுக்கும் நோக் கத்திலும் பவன் கல்யாண் பேசி யுள்ளது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

பொது மேடையிலேயே தனது கட்சியின் மூத்த தலைவரும், மாநில உள்துறை அமைச்சருமான வாங்க லப்புடி அனிதாவை பவன் கல் யாண் மிரட்டலுடன் விமர்சித்தது தெலுங்கு தேசம் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர் பாக விரைவில் அறிக்கை வெளி யிட தெலுங்கு தேசம் கட்சி தயா ராகி வருவதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

தெலுங்கு தேசத்தை உடைக்க பாஜக சதி?

புதிய அரசு பதவியேற்பு விழாவிற்கு பிறகு சந்திரபாபு - பவன் கல்யாண் எதிரும், புதிருமாகவே உள்ளனர். அரசு துறை தொ டர்பாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள் வதும் குறைந்துவிட்டது. திருப்பதி மாட்டுக் கொழுப்பு லட்டு விவகாரத்தில் இருவருமே தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனர். பவன் கல்யாண் ஒரு படி மேலே சென்று சனாதனத்தை காக்க,”சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அமைக்க வேண்டும்” என முதல்வர் சந்திரபாபுவுக்கு கோ ரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை தொடர்பாக  சந்திரபாபு வாய்திறக்கவில்லை. அதன் பின்னரே தற்போது உள்துறை அமைச்சர் பதவியைக் கேட்டு பொது மேடையிலேயே சந்திரபாபுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஒருவேளை உள்துறை அமைச்சர் பதவியை சந்திரபாபு கொடுக்க முன் வரவில்லை என்றால், பவன் கல்யாண் மூலம் தெலுங்கு தேசத்தை உடைக்க பாஜக சதி செய்து வருவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. பவன் கல்யாணின் செயல்பாடு அனைத் தும் பாஜக தயாரித்துக் கொடுத்த திரைக்கதை என அரசியல் விமர்ச கர்களும் கூறியுள்ளனர்.