tamilnadu

img

சென்னையில் இதய ரத்தக்குழாய் குறித்த சர்வதேச மாநாடு

சென்னை:
இதய ரத்தக் குழாய் குறித்த சர்வதேச மருத்துவ மாநாடு, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!

 இதய நோய் மற்றும் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க சங்கம், இதய நோய் மற்றும் இதயப் பகுதி அறுவை சிகிச்சைக்கான ஆசிய, இந்திய சங்கங்களின் ஒத்துழைப்போடு, சென்னை சிம்ஸ் மருத்துவமனையின் இதய, இரத்தக் குழாய் கோளாறுகளுக்கான சிகிச்சை மையம் இம் மாநாட்டை நடத்துகிறது.உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவர்களும், இத்துறை தொடர்பான நிபுணர்களும் இந்த இணைய வழிக் கருத்தரங்கில் பங்கேற் கின்றனர்.

தீவிர இரத்தக் குழாய் கோளாறுகளுக்கு, சிகிச்சையாக - அவற்றை வெட்டி நீக்கும் முறை, இதயத்திலிருந்து ரத்தத்தை வெளிக் கொணரும் பிரதான குழாயின் பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை (வகைகளில் எது சிறந்தது (நெஞ்சுப் பகுதியைத் திறந்து அளிக்கப்படும் அறுவை சிகிச்சை மற்றும் அதைத் தவிர்த்து - மெல்லிய குழாய்களை உடலுக்குள் செலுத்தி, அவற்றின் வழியே உரிய சாதனங்களைப் பயன்படுத்தி வெளியில் இருந்தே சிகிச்சை அளிப்பது என இருவகையும் இணைந்து இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது) என்பது உள்ளிட்ட இன்னும் பல நுட்பமான மருத்துவ முறைகளில் மாற்று வழிகள், உள்ளிட் டவை தொடர்பாக வெவ்வேறு கருத்து கொண்ட மருத்துவர்களிடையே விவாதங்களும் நடைபெற உள்ளன என்று எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவரும் சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகியுமான  ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

;