tamilnadu

img

மருத்துவப்படிப்புக்கு தேர்வான பழங்குடியின, பட்டியலின மாணவிகள்... முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற களிப்பு

மேட்டுப்பாளையம்;
 அரசுப்பள்ளியில் பயின்று தனி பயிற்சி ஏதுமின்றி முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த ஏழ்மையான மலைக்கிராம மாணவிகளின் மருத்துவர் கனவு நிறைவேறியது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு என்னும் மலையடிவார குக்கிராமத்தில் உள்ளது வெள்ளியங்காடு அரசு மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகளே அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். சரியான போக்குவரத்து வசதி இல்லையெனினும், பல கிலோமீட்டர் தூரம் வரை வன விலங்குகள் உலாவும் அடர்ந்த காட்டின் வழியே ஆர்வமுடன் நடந்தே பள்ளிக்கு வருகின்றனர். கல்வி கற்க அவர்களின்ஆர்வத்தையும் அதற்காக அவர்கள்படும் சிரமத்தையும் கருத்தில்கொண்டு ள்ள இப்பள்ளியின் ஆசிரியர்கள் மிகுத்தகவனமெடுத்து பாடங்களை அவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக கற்றுத் தந்துவருகின்றனர்.

இதனால் தொடர்ச்சியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி, கடந்தாண்டு இங்கு படித்த பழங்குடியின மாணவிகள்  கடினமான தேர்வுகளில் தேர்ச்சி,இந்திய அரசு சார்பில் ஜப்பான் நாட்டில்நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க இப்பள்ளி மாணவிகள் தேர்வுஎன பல சாதனைகளை அப்பள்ளி யானது செய்து வருகிறது. இந்நிலை யில் தற்போது இப்பள்ளியில் பயின்றுவரும் வெள்ளியங்காடு மலைக்கிரா மத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரம்யா மற்றும் தாயனூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பைச்சேர்ந்த பட்டியலின மாணவி பிஸ்டிஸ் பிரிஸ்கா ஆகிய இரு மாணவிகள் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். பழங்குடியின மாணவி ரம்யாவின் தந்தை சந்திரன் விவசாய கூலியாகவும், பிஸ்டிஸ் பிரிஸ்காவின் தந்தை பிரபாகரன் தனது கிராமத்தில் சிறு தையல் கடையும் நடத்தி வருகின்றனர். கொரோனா முடக்க காலத்தில் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளுக்கே போய் தேர்விற்கு படித்துள்ளனர் இம்மாணவிகள். போக்குவரத்து, சாலை என அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலைக்கிராமங்களில் ஏழ்மையான குடும்ப சூழல், காட்டு வழியே கால்நடையாய் பயணித்து அரசுப் பள்ளியில் படிப்பு, கோச்சிங் சென்டர் போகவில்லை அதற்கான வசதிகளும் இல்லை, ஆனாலும் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி என அசத்தியுள்ள இம்மாணவிகளின் சாதனையை வியப்புடனேயே அனைவரும் வாழ்த்துகின்றனர். 

தங்களது கிராமங்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்பல மைல் அப்பால் உள்ள மருத்து வரை சந்திப்பதும் மருத்துவம் பார்ப்பதும் சாதாரண காரியமல்ல என்றும் இதன்காரணமாகவே தாங்கள் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவோடு படித்ததாக கூறும் இம்மாணவியர் இருவருக்கும் கலந்தாய்வு மூலம் மருத்துவகல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தமிழக அரசு அறிவித்த 7.5 உள் இட ஒதுக்கீடு காரணமாக இவர்களின் மருத்துவர் கனவு நனவாகியுள்ளது. பழங்குடியின மாணவியான ரம்யாவிற்கு கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியிலும், பட்டியலின மாணவியான பிஸ்டிஸ் பிரிஸ்காவிற்கு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. இதற்கு மேல் மருத்துவக் கல்விக்கான கல்வி கட்டணம் செலுத்த இவர்களிடம் எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில் இவர்கள் படித்த அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் தன்னார்வலர்கள்  நிதி உதவி செய்து உதவிட முன்வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.தங்களது குடும்பத்தில் மட்டுமல்ல, இவர்கள் வாழும் ஊர்களுக்கே இவர்கள் தான்  மருத்துவம் பயில உள்ள முதல் மாணவிகள் என்பதால்இங்குள்ள பழங்குடியின மலைக்கிரா மங்கள் முழுவதுமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.     (ந.நி.)

;