சென்னை:
கொரோனா தொற்று காலத்தில் பெரும்பாலான மக்கள் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை ஒருபோதும் உணரவில்லை.புரதத்தின் முக்கியத்துவமும் அதன் பங்கு பற்றி ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. பெரும்பாலான இந்தியர்கள் புரதக் குறைபாடு ஒரு முக்கியமான கவலை அல்ல என்று நினைக்கிறார்கள். உடற் பயிற்சி செய்பவர்களுக்கு தான் அதிக புரதம் தேவை என்று சமூகத்தில் கட்டுக்கதை நிலவுகிறது. உடலால் ஜீரணிக்க கடினமாக இருக்கும் என்றும் மக்களில் சிலர் நினைக்கிறார்கள். நமது உடலுக்கு தேவைப்படும் முக்கியமான சத்துக்களில் ஒரே ஊட்டச்சத்து புரதமாகும். புரதத்தை குறைப்பது உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
இந்தியாவில் புரதக் குறைபாடு மற்றும் புரதத்தைப் பற்றிய விழிப்புணர்வின் அளவைக் கண்டறிய இந்திய சந்தை ஆராய்ச்சி பணியகம் (ஐ.எம்.ஆர்.பி) நடத்திய ஆய்வில், நகர்ப்புற பணக்காரர்களில் 73 சதவீதம் பேர் புரதக் குறைபாடுடையவர்களாக இருப்பது தெரியவந்தது. அவர்களில் 93 சதவீதம் பேர் தங்கள் அன்றாட புரதத் தேவைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்கிறார் பிரபல உணவு ஆலோசகர் அதிதி மெஹ்ரோத்ரா கூறுகிறார்.பால், பருப்புவகைகள், தினை, கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்து போன்ற நிலையான தானியங்கள், முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை நாள்தோறும் சரியாக உட் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும் என்கிறார் அவர்.