tamilnadu

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இந்திய நட்சத்திரங்கள் முன்னேற்றம்

பி.வி.சிந்து -  பேட்மிண்டன்

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, எஸ்டோ னிய வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-5, 21-10  ஆகிய  நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

லக்சயா சென் - பேட்மிண்டன்

இந்திய வீரர் லக்சயா சென், உலகத்தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். 22 வயதான லக்சயா சென், தொடக்கத்தில் சில மோசமான ஷாட்டுகள் மூலம் எதிரணிக்கு புள்ளிகளை தாரை வார்த்தார். இதனால் அவர் தோல்வியை தழுவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் செட்டின் நடுப்பகுதியில் சுதாரித்து விளையாட ஆரம்பித்த லக்சயா சென் அதிரடி ஸ்மாஷ் ஷாட்டுகளுடன் 21- 18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஸ்வப்னில் குசலே - துப்பாக்கிச் சுடுதல் 

ஆடவர் 50 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரரும், ஆசிய சாம்பியனான ஸ்வப்னில் குசலே 12 சுற்று முடிவில்  197 புள்ளிகளை குவித்து இறுதி  சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம்  ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னே றிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்புக்கு ஸ்வப்னில் குசலே சொந்தக்காரர் ஆனார்.

லவ்லினா போர்ஹகைன் - குத்துச்சண்டை

மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய  வீராங்கனை லவ்லினா போர்ஹகைன், நார்வேயை சேர்ந்த சன்னிவா ஹாப்ஸ்டாட் என்பவரை எதிர்கொண்டார். முதல் படிகளில் இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் லவ்லினா சரமாரி குத்துகளை விட்டு சன்னிவாவை திணறடித்தார். இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் லவ்லினா சீனாவை சேர்ந்த லி கியான் என்பவரை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்திற்கு முன்னேறிய சீனா

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் 4 நாட்களாக மந்தமான நிலையில் பதக்கங் களை வென்று வந்த சீனா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் 5ஆம் நாளான புதனன்று மாலை 6 மணி நிலவரப்படி சீனா 8 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என 16 இடங்களுடன் முதலிடத்திற்கு முன்னே றியது. ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் இரண்டா வது இடத்திலும், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்ஸ் நாடு 6 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா, பெலாரஸ்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையின் காரண மாக ரஷ்யா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது. அதே போல உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவி செய்ததாக கூறி பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நல்லெண்ண நடவடிக்கையாக ரஷ்யா சார்பில் 36 பேரும், பெலாரஸ் சார்பில் 24 பேரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அழைப்பு விடுத்து இருந்தது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் குறிப்பிட்ட வீரர் - வீராங் கனைகளை மட்டும் பாரீஸ் ஒலிம்பிக் களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா சார்பில் 15 பேரும்,  பெலாரஸ் சார்பில் 17 பேரும் என மொத்தம் 32 வீரர்-வீராங்கனை கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு தடையில்லை

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை  விதித்துள்ள நிலை யில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போதிலும் அந்நாட்டிற்கு தடை விதிக்காமல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனு மதித்து உள்ளது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்பந்தங்கள், விதிமுறைகளை மீறாத தால் அனுமதி மறுக்கப்படவில்லை என சர்ச்சைக்குரிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.