tamilnadu

img

பள்ளிக்கரணை ஜிஎம்டி நிறுவனத்தில் 126 தொழிலாளர்கள் பணி நீக்கம் 80 நாட்களாக தொடரும் வேலை நிறுத்தம்

சென்னை, ஜூன் 13 - பள்ளிக்கரணையில் செயல்படும் கிண்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் (ஜிஎம்டி) நிர்வாகம் 126 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. லேத் எந்திரங்களுக்கான உதிரிபாகங் களை உற்பத்தி செய்யும் ஜிஎம்டி நிறுவனம் 65 ஆண்டுகளாக பள்ளிக்கரணையில் இயங்கி  வருகிறது.

இங்கு பணியாற்றும் 260 தொழி லாளர்கள் பணியாற்றுகின்றனர். இன்ஜினி யரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யுனியன் (சிஐடியு) உறுப்பினர்க ளாக உள்ளனர்.  இந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு தொழிலாளர்கள் 88 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

அதன்பிறகே 2014 ஆண்டும் முதன்முறை யாக ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத  தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி நிர்வாகம் வழங்கியது. இவற்றை யெல்லாம் மீறி மூன்று முறை ஊதிய ஒப்பந்தம் நடைபெற்றது.

மூன்றாவது ஒப்பந் தம் 31.5.2023 தேதியோடு முடிவுற்றது. அதன்பிறகு புதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை நடத்தாமல் நிறுவனம் காலம் கடத்தியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொழிலாளர்கள் 22 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர் துறை ஆணையர் அறிவுரைப் படி போராட்டத்தை தொழிற்சங்கம் விலக்கிக்  கொண்டது. அதன்பிறகும் நிர்வாகம் பேச்சு வார்த்தையை சுமூகமாக முடிக்காமல் கால தாமதம் செய்து வருகிறது.

இதனால் கடந்த மார்ச் 22ந் தேதி முதல் தொழிலாளர்கள் நிறுவன வளாகத்திற்கு உள்ளேயே கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி னர். போராட்டத்தின் 83ஆவது நாளான ஜூன் 12 அன்று நிர்வாகம், 126 தொழிலாளர் களை பணி நீக்கம் செய்தது. இதனையடுத்து  தொழிலாளர்கள் வியாழனன்று (பிப்.13) நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து 84ஆவது  நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர்.   இது குறித்து தொழிலாளர்கள் கூறுகை யில், “தொழிற்சங்கம் அமைத்த பிறகே 500  ரூபாய்க்கும் குறைவாக இருந்த அடிப்படை  ஊதியம் ஆயிரம் ரூபாய் அளவிற்கு அதிகரித் தனர்.

அடிப்படை உரிமைகள் கிடைத்தன. 2014ல் 4750 ரூபாய் ஊதிய உயர்வு பெற்றோம்.  3 ஆண்டுக்கு ஒருமுறை போடப்படும் ஒப்பந்தம் என்பதால் 10 ஆயிரம் ரூபாய் ஊதிய  உயர்வு மற்றும் இதர சட்டச் சலுகைகளை கோருகிறோம். இதன்மீது நிர்வாகம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தால் பழிவாங்குகிறது. தொழிற்சங்கம் தொடங்கி போராட்டங் கள் வலுத்த பிறகே, நிர்வாகத்திற்கு ஆதர வாக உள்ளவர்களுக்கும் கூடுதல் சலுகைகள்  கிடைத்தது. நிறுவனத்திற்கு உள்ளே 50  விழுக்காடு தொழிலாளர்கள் இருந்தாலும் உற்பத்தி நடைபெறவில்லை. கோரிக்கை கள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.