tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு....

சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  வியாழனன்று (டிச.10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.இளமையாக்கினார் கோவில்குள சுவர் இடிந்து விழுந்து சாலை உள்வாங்கியது. இது குறித்து நகராட்சி ஊழியர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.  இதனைத் தொடர்ந்து ரயிலடி இந்திரா நகரில் முழங்கால் வெள்ளநீரில் பொதுமக்களை சந்தித்து அப்பகுதி மக்களிடம் ஆறுதல் கூறினார்.

பின்னர் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சித்தலபாடி ஊராட்சி வச புத்தூர் கிராமத்தில் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஏழு நாட்கள் ஆகியும் வடியாமல் உள்ள முழங்கால் அளவு வெள்ளநீரில்  இறங்கி  பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறினார். பின்னர் பிச்சாவரம், உத்தமசோழ மங்களம், பரங்கிப்பேட்டை, கரிகுப்பம்,மணிக்கொல்லை,புதுசத்திரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நெற்பயிர்கள் அழுகி வேதனையில் இருந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பயிர்காப்பீடு கிடைக்க நடவடிக்கை
பின்னர் வேளாண்துறை செயலாளரும் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடியிடம் தொலைபேசி மூலம் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் காப்பீடு தொகை கிடைக்கும் வகையிலும் தண்ணீர் சூழ்ந்த அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.இந்த ஆய்வின்போது கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பனை செல்வம், ராஜா, முத்து, பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமானந்தம், விஜய், முகமது அசன். பரங்கிப்பேட்டை நகர செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

;