சென்னை, மே 30- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி த்துறை அறிவித்துள்ள நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி நடத்தும் பல பள்ளிகளில் போது மான ஆசிரியர்கள் மற்றும் அடிப் படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
சில பள்ளிகளில் கூடுதல் கட்டி டங்கள் தேவைப்படுகிறது. மாநக ராட்சிக்குட்பட்ட 109 வது வார்டில் (சூளைமேடு) நமச்சிவாயபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 280 குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் போதிய கழிப்பறை இல்லை என்றும் சுற்று ச்சுவர் முறையாக இல்லை என்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த பள்ளி கட்டி டம் கட்டி 25 ஆண்டுகள் தான் ஆகி றது. ஆனால் கட்டிடம் மிக மோச மான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாக பெற்றோர்கள் தெரி வித்தனர்.
மழைக் காலங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். பள்ளியில் உள்ள மேலாண்மை குழு இது குறித்த கோரிக்கையை நிர்வாகத் திடம் எடுத்துரைத்தும் இதுவரை பள்ளி புதுப்பிக்கப்படவில்லை.
புனரமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீட் டுக்காக காத்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளதால் இந்த பணிக்கு நிதி ஒக்க முடியவில்லை என்றும் தேர்தல் முடிந்த பிறகு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப் படும் என்றும் மாநகராட்சி மத்திய பகுதி துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை சங்கராபுரம் பகுதியில் உள்ள மாநக ராட்சி ஆரம்பப்பள்ளி 28 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. திருவள்ளுவர் புரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பள்ளி களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
84 வது வார்டில் கொரட்டூரில் ஒரே வளாகத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு போதுமான வகுப்பறை களும் ஆசிரியர்களும் இல்லாத காரணத்தால் பொது தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறை ந்துள்ளதாக பெற்றோர்கள் தெரி வித்தனர்.
2023 - 24 கல்வி ஆண்டில் 70 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். சில வகுப்புகளில் மேஜைகள் நாற்காலிகள் பற்றாக் குறையாக உள்ளது. இந்தப் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதா கிருஷ்ணன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உறுதி அளித்த போதும் இதுவரை பணிகள் தொடங்கப் படவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். திருவொற்றியூர் 12வது வார்டில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் இருந்தும் அங்கு ஆய்வக உதவி யாளர்கள் இல்லை என்று கூறப்படு கிறது.
இது குறித்து தகவல் மாநக ராட்சிக்கு தெரிய வந்தவுடன் பள்ளியை நல்ல இட வசதியுடன் மற்றொரு இடத்தில் கட்ட ஏற்பாடு கள் நடந்து வருகிறது. நிலம் கையக ப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன.
மேலும் அடுத்த இரண்டு ஆண்டு களில் ஆரம்பப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் திட்டம் உள்ளதாக அதி காரிகள் கூறினர். 147 பள்ளிகள் தரம் உயர்கிறது சென்னை மாநகராட்சி யில் 9 மண்டலங்களில் உள்ள 147 பள்ளிகள் தரம் உயர்த்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாக மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) சரண்யா அரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 15 மண்டலங் களில் 420 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தவுடன் குறிப்பாக வட சென்னை யில் பள்ளிகளை புனரமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.