செய்தியாளர்களை மிரட்டும் வகையில் அவதூறாக மாரிதாஸ் வெளியிட்ட வீடியோக்களை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்ட மாரிதாஸ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நியூஸ் 18 நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. மேலும் மாரிதாஸிடம் ஒன்றரை கோடி இழப்பீடும் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. மக்களை மத ரீதியில் பிளவு படுத்தும்வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து தனிநபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது என்றும் சமூக வலைதளங்களில் இதுவரை மாரிதாஸ் வெளியிட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் மாரிதாஸ் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.