சென்னை:
விதிமீறல் கட்டிடங்களை இடிக்காத சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.விதிமீறல் கட்டிடத்தின் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிமீறல் கட்டிடம் மீது சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டனர்.2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் பாடம் கற்கவில்லை என நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.தேவைப்பட்டால் தலைமைச் செயலாளரையும் ஆஜராகச் சொல்லி விளக்கம் கேட்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.