வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

சென்னை 
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில சிஆர்பிஎப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் ஆளுநர் மாளிகை இடைநிலை ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அடுத்தடுத்து பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக சுகாதாரத்துறை ஆளுநர் மாளிகையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்தது. 

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இன்று மாலை (ஞாயிறு) காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மிதமான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க காவேரி மருத்துவமனை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆளுநர் பன்வாரிலால் தனது இருப்பிடத்துக்குச் சென்றார்.   

;