தமிழக நிலப்பரப்பில் 30% பாலையாகிக் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கைகள் எச்சரித்துவரும் வேளையில், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்துநிறுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச்செல்கிறது.
தமிழரின் தொன்மையாம், நகர நாகரீகமாம் கீழடியின் பெருமையை உலகறியச்செய்ய நேற்றைக்கு முதல்வர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல்நாட்டும் அதே வேளையில், வரலாற்று சிறப்புமிக்க பிரான் மலை நொறுக்கி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆளுங்கட்சிக்கு உடந்தையாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இயற்கை வள கொள்ளையை உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும் என தமிழக அரசை கோருகிறேன்.
#maduraiMPdemands
#பிரான்மலை #வைகைநதி