tamilnadu

img

முழுஅடைப்பு: தி.க. ஆதரவு

சென்னை:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு‌ திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத் தம், வேளாண் உற்பத்தி பொருள் கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு என்ற மூன்று சட்டங்களை மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

விவசாயம் என்பது மாநில அரசின் துறையாகும். மாநில அரசுகளின் கருத்தையும்கூட கேட்காமல், மாநிலங்களின் உரிமையைப் பறிக் கும் வகையிலும் இந்தச் சட்டம் தான் தோன்றித் தனமாகப் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை இந்தியா முழுவதும் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.விவசாயம் என்பது கார்ப்பரேட்டுகளின் கைக்கு மாறப் போகிறது என்ற அச்சத்தில், இந்தியாவே எதிர்க்கிறது என்பதை வெளிப்படுத்த (டிச.8) அகில இந்திய அளவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனைத் திராவிடர் கழகம் வரவேற்கிறது, ஆதரிக்கிறது. கழக தொண்டர்கள் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பொதுமக்களும் ஆதரவு தந்து இந்தப் போராட்டத்தை வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

;