tamilnadu

img

முன்னாள் அமைச்சர் காலமானார்...

சென்னை:
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாயன்று (டிச.8) காலமானார். அவருக்கு வயது 86.உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஆர். ராதா சிகிச்சை பலனின்றி காலமானார்.எஸ்.ஆர். ராதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் ஜவுளி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.எஸ். ஆர்.ராதா கும்பகோணம், மதுரைகிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்.இளமைக் காலத்தில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டவர்.சென்னையில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

;