சென்னை, பிப். 23 - “’வாங்கய்யா... வாங்கய்யா.. உடனே வாங்கய்யா இல்லைன்னா லேகியம் தீர்ந்து போயிடும் ஐயா’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கிண்டலடித்திருந்தார்.
அண்ணாமலையும் அதனை ஒப்புக்கொண்டு, “என்னை லேகியம் விற்பவர் என்கிறார்கள். அவர்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. நான் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி பெரிய பாட்டிலில் லேகியம் விற்கப் போகிறேன்.
அது குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் மருந்தாக அமையும்” என அதிமுக-வைத் தாக்கினார். இந்நிலையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை பூச்சாண்டி போல் பிள்ளை பிடிக்கும் வேலை செய்கி றார். அவரது தாடியைப் பார்க்கும் போது மாயாண்டி பூச்சாண்டி போல் தோன்றுகிறது” என்று அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் பதில் தாக்கு தல் நடத்தியுள்ளார்.