tamilnadu

img

மாணவ - மாணவியருக்கு மனநல ஆலோசனைகள்!

சென்னை, மே 14- தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 32 ஆயிரத்து  164 பேருக்கும், மாணவிகள்  19 ஆயிரத்து 755 பேருக்கு மாக மொத்தம் 51 ஆயிரத்து  919 பேர்களுக்கு மனநல ஆலோசனை கள் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.  சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர் வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கடந்த 2022- ஆம் ஆண்டு முதல், ‘104’ என்ற எண் மூலம்  மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரு கின்றன. 2021-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மனநல  ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதேபோல் 2024-ஆம் ஆண்டிலும், கடந்த மே 6 முதல் மே 12 வரை 51 ஆயிரத்து  919 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 137 மாண வர்கள் மட்டும், மன வருத்தத்தில் இருக்கி றார்கள். மன உளைச்சலில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியாக மருத்து வத் துறையின் சார்பில் மனநல ஆலோசனை கள் வழங்கப்பட்டு வருகிறது. மனநல ஆலோ சகர்கள் நேரில் சென்றும், தொலைபேசியின் வாயிலாகவும் மனநல ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்” என்று மா.  சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.