சென்னை, மே 18- 2024-25ஆம் கல்வியாண்டு அடுத்த சில வாரங்களில் தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பெற்றோர்கள் ஆர்வத்து டன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டை போல வெயில் வாட்டி வதைத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும். அதாவது ஜூன் 3-ஆவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறிவந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் இதமான வானிலை நிலவி வருகிறது. எனவே ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எமிஸ் வாட்ஸ்ஆப் செயல்பாடு
இந்த சூழலில் EMIS எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் சிஸ் டத்தில் பள்ளி மாணவர்களின் தொலைபேசி எண்களை பதிவு செய் யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன. ஏற்கெனவே ஒவ்வொரு பெற் றோரிடம் இருந்தும் தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை உறுதிபடுத்தப்படா மல் உள்ளன. எனவே OTP அனுப்பி அதைக் கொண்டு எமிஸ் சிஸ்டத்தில் சரியான எண்ணை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற் காக பெற்றோர்களை தொலைபேசி மூலம் அழைத்து ஆசிரியர்கள் பேசி வருகின்றனர். சில இடங்களில் OTP சொல்ல முடியாது என்று கறார் காட்டும் பெற்றோர்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளை யும் முடித்து விட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு தொடங்கி யதும் பள்ளிக்கல்வித்துறை - பெற் றோர் இடையிலான தகவல் தொடர்பு, அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது, மாணவர்களின் கற்றல் சார்ந்த அனைத்து விஷயங்களும் பெற்றோர்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் சரியான நேரத் திற்கு பள்ளிகளுக்கு வருகிறார்களா?, பள்ளி வளாகங்களில் மாணவர் களின் செயல்பாடுகள் எப்படி இருக் கின்றன?, வகுப்பறையில் பாடத்தை சரியாக கவனிக்கிறார்களா, இல் லையா, மாணவர்களின் படிப்பு எந்த நிலையில் உள்ளது, மாணவர்கள் ஆசிரியர்களுடன் உடன் எப்படி நடந்து கொள்கிறார்கள், மது அருந் தியோ அல்லது போதை பொருங் களை உட்கொண்டு பள்ளிக்கு வரு கிறார்களா, ஒவ்வொரு தேர்விலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் என்ன, எந்தெந்த பாடங்களில் மாண வர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள் பெற்றோர்கள் என் னென்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்கள் வாட்ஸ் ஆப் மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப் படும் என்று கூறப்படுகிறது.