tamilnadu

img

மருத்துவப் படிப்பிற்கு தேர்வான மாணவருக்கு தங்க கணையாழி அணிவித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.....

புதுக்கோட்டை:
தங்கள் பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான மாணவருக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். 

மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 11 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கீரமங்கலம் பெண்கள் பள்ளியில் 3, ஆண்கள் பள்ளியில் 1 என மொத்தமாக 4 மாணவர்கள்கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி களில் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றனர். இதில், செரியலூர் என்ற குக்கிராமத்தில்உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படித்த திவ்யா, தரணிகா, ஹரிகரன் ஆகிய 3 மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றது அந்த கிராமத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. தேர்வு பெற்றவர்களின் குடும்பங்கள் அனைத்தும் வறுமையில் வாடும் ஏழைவிவசாயத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்வு பெற்ற மாணவர்களின் கல்வி செலவுக்காக பல்வேறுதரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். குறிப்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளார். ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தலா ரூ.25 ஆயிரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர் அன்பரசன் தலா ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர் களின் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசேஏற்கும் என்ற முதல்வரின் அறிவிப்பும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த நம்பிக்கையையும் தெம்பை யும் அளித்திருக்கிறது.

ஆசிரியர்கள் அணிவித்த கணையாழி
இந்நிலையில், கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து முதல்முறையாக மருத்துவப் படிப்புக்குத் தேர்வு பெற்ற மாணவன் ஆர்.ஹரிஹரனுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவர் துரைமாணிக்கம் முன்னிலை யில் நடைபெற்ற பாராட்டு விழாவில்மாணவனுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு ஆசிரியர் - மாணவர் களிடையே மிகவும் உற்சாகமும், ஊக்கமும் தந்த விழாவாக அமைந்தது.

ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்
இதுகுறித்து மாணவன் ஹரிஹரன் கூறுகையில், சிறு வயது முதல் நான் டாக்டராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துகொண்டே இருந்தது. நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்தபிறகு எனது நம்பிக்கை தளர்ந்தது. பல லட்சம் செலவு செய்து பயிற்சி மையத்தில் படிக்கும் அளவுக்கு எனது குடும்பத்தில் வசதி இல்லை. மிகவும்ஏழைக் குடும்பத்தில் பிறந்த நாமெல்லாம் டாக்டர் ஆக முடியாது என்று நினைத்திருந்தேன். இந்நிலையில்தான், தமிழக அரசு 7.5 இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைப் படுத்தியது. அந்த இட ஒதுக்கீட்டு அடிப்படையில்தான் நான் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டேன். நான் மருத்துவராகி எனது குடும்பத்தைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.

;