tamilnadu

img

பிப்.3 முதல் தொடர் போராட்டம்... பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு...

சென்னை:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் பட்டதாரி ஆசியர் கழகம் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறது.தமிழ்நாடு உயர்நிலை-மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நிறுவனத் தலைவர் அ.மாயவன் முன்னிலையில் மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் சி.ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்திருந்த வாக்குறு தியின் அடிப்படையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்  2019 ஜனவரியில் ஜேக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்தத்தின் போது சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள அனைத்து பழிவாங்கல் நடவடிக்கை களையும், ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்களுக்கு மட்டுமே பணிமூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும், மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயரும் என்ற அடிப்படையில், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வயத உயர் கல்விக் கான ஊக்க ஊதியத்தை பறிமுதல் செய்ததை திரும்பப் பெற்று மீண்டும் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித் துறையும் 31.1.2021 க்குள் நிறைவேற்றித் தரவேண்டும். அப்படி முன்வரவில்லை என்றால், 3.2.2021 புதன்கிழமை முதல், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல் என தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு
விவசாயம் என்பது மாநில அரசின் வரம்புக்குட்பட்டது. அந்த உரிமையை மத்திய அரசு பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல. மேலும், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காது, மாறாக கேடுகளைத்தான் கொடுக்கும். ஆகவே அச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் தில்லி சாலைகளில் அறப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் இப்போராட்டத் திற்கு பட்டாதாரி ஆசிரியர் கழகம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

;