ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ராணிப்பேட்டை,பிப்.23- ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் புதன் கிழமை (பிப்,26) காலை 11 மணி யளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், ஆட்சித்தலைவர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளா ண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப் புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டு றவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்கு வரத்துத்துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள். எனவே, ராணிப் பேட்டை மாவட்டத்்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்தி டுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திர கலா கேட்டுக்கொண்டுள் ளார்.
இரு வாகனங்கள் மோதல்: தீயில் சிக்கி ஒருவர் பலி
திருவண்ணாமலை, பிப். 23- திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள பாச்சல் கிராமம் அருகே ஞாயிறு அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலை நோக்கி சென்ற ஈச்சர் வேன் வாகனமும், செங்கம் நோக்கி வந்த 32 டயர் கொண்ட சிமெண்ட் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் வாக னங்கள் தீப்பிடித்து எரிந்தது. டேங்கர் லாரி ஓட்டுனரும் ஈச்சர் வாகன ஓட்டுனரும் தீயில் சிக்கினர். தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், ஈச்சர் வாகன ஓட்டுநரை மீட்பதற்குள் அவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். கிளீனர் மட்டும் எரிந்த நிலையில் உயிருடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அனல் வீசியதால் யாரும் அங்கு செல்லா ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . இந்த விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டது தீயில் எரிந்த வாகனங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சரிசெய்யப்பட்டு அதன் பிறகு வாகனங்கள் அந்த சாலையில் இயக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பாய்ச்சல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.