சென்னை, செப்.12- சென்னை திருவொற்றி யூர் காலடிப்பேட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் (46). இவர் தண்டையார்பேட்டை மின்வாரியத்தில் மின் பராமரிப்புப் பிரிவில் கம்பியாளர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், புதனன்று (செப்.11) தண்டை யார்பேட்டை மார்க்கெட் பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வந்த புகாரின் அடிப்படை யில் ஜீவானந்தம் அங்கு சென்று மின்சாரம் பில்லர் பழுதடைந்திருந்தை கண்ட றிந்தார். பின்னர் அதை சரி செய்யும் பணியில் ஈடு பட்டிருந்தபோது, ஜீவான ந்தத்தின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்த பொது மக்கள் அவரை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்த வர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். உயிரிழந்த ஜீவானந்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மின் அரங்கம் தண்டை யார்பேட்டை உறுப்பினர் ஆவார். இவரது இறப்புக்கு வடசென்னை மின் அரங்க இடைக்கமிட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இரங்கல் கூட்டத்தில் இடைக்கமிட்டி செயலாளர் ரவிக்குமார், கிளைச் செய லாளர் சத்யா, தலைவர் கதிரேசன், திருநீர் செல்வம் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.