அ திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை நாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்று மிகப்பெரிய பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் அதிமுக கொண்டுவந்த திட்டமா? பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அதிமுக கொண்டுவந்த திட்டமா? காலை சிற்றுண்டி திட்டம் யாருடையது அதிமுக திட்டமா? அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றதா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்களும், உரிமைகளும் பாஜக விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முழுமையாக தோற்கடிக்கப்பட இருக்கிறார். பாஜகவுடன் இருந்தால் டெபாசிட் கிடைக்காது என டெபாசிட்டை காப்பாற்ற தனியாக பிரிந்தது போல் உள்ளே வெளியே நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப்பட்டறை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து.